இந்தியா சத்திரம் கிடையாது! உச்சநீதிமன்றம் கறார்! மனிதநேயத்திற்கு புறம்பாக இருக்கிறது - திருமாவளவன்
புதுக்கோட்டை: வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக இருப்பதாக திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
தஞ்சம் புகும் மக்களை வரவேற்கவும் அவர்களுக்கு உரிய அடைக்கலத்தையும் தர வேண்டும் இது அரசாங்கத்தின் கடமை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்றத்தை விட உச்சநீதிமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? என்கிற கேள்வியை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது. பல்கலைக்கழக மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பின்போது, மாநிலங்களவை தலைவரும், நாட்டின் குடியரசுத் துணை தலைவரும் ஆவேசமாக உச்சநீதிமன்றத்தை விமர்சித்திருந்தார்.
மறுபுறம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதன் மூலம் உச்நீதிமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? நாடாளுமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர். கவாய், மிகச்சரியாக இதற்கு விடையளித்திருக்கிறார். உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் என எதுவாக இருந்தாலும் அரசியலமைப்புதான் இதற்கெல்லாம் மேலானது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கவாய் கருத்தை, விசிக வரவேற்று பாராட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம்தான் அனைத்து அதிகாரங்களையும் நமக்கு வழங்குகிறது. புதிய இந்தியாவை கட்டமைக்க நமக்கு அரசியலமைப்புதான் உதவுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை உள்ளிட்டவை எப்படி இயங்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுதல்களை வழங்கு்ம அரசியலமைப்புதான் அனைத்தை விடவும் உயர்ந்தது, மேலானது. இதனை பாஜக அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவரை தங்களது கைப்பாவையாக பயன்படுத்த கூடிய வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது மிகுந்த கவலையளிக்கிறது.
இலங்கை தமிழர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில், 'பிற நாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு இடம் கொடுக்க இந்தியா ஒன்றும் சத்திரமல்ல' என சொல்லியிருப்பது, மனிதாபிமானத்திற்கு புறம்பானதாக இருக்கிறது. புலம் பெயர்வது உலகம் எங்கும், எல்லா நாடுகளிலும் நிகழக்கூடிய ஒன்று. இலங்கையிலிருந்து மட்டுமே புலம்பெயர்த்தல் நடப்பதில்லை.
ஆக உலகம் எங்கும் நடக்கும் புலப்பெயர்வை நாம் சட்டம்போட்டு தடுக்க முடியாது. நாடுகளின் எல்லைகளை கொண்டும் இதை தடுக்க முடியாது. தஞ்சம்புகும் மக்களை வரவேற்கவும், அவர்களுக்கு உரிய அடைக்கலததை தருவதும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசின் கடமையாகும். ஐநா இதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆணையம் அகதிகளின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளோடு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
இப்படி இருக்கும்போது இந்தியாவின் உச்சநீதிமன்றம், அகதிகளுக்கு இந்தியா சத்திரமல்ல என்று கூறியிருப்பது மனித நேயத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications