Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள்.. சிபிசிஐடி விசாரணை.. ஆட்சியரிடம் வேங்கைவயல் மக்கள் பரபர புகார்!

இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை காவல்துறையினரையும் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்தனர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், தங்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள சிபிசிஐடி காவலர்கள் வற்புறுத்துவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் 200 குடும்பங்களுக்கும் அதிகமாக பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பரில் இக்கிராமத்து குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது குடிநீர் மாசடைந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்து குடிநீர் தொட்டியை சோதனை செய்து பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் மிதந்திருக்கிகின்றன. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சிக்கையில் காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொள்ளாமல் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் தலையீட்டின் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். இப்படியாக விஷயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த விவாகாரம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.

கண்டனம்

கண்டனம்

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், ஏன் பட்டியலின மக்களுக்கு மட்டும் தனியாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது? என்றும் கேள்வியெழுப்பி குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பான வழக்கை விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள், 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 11 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த விசாரணைக்குழுவானது உள்ளூர் மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் நியாயமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிபிசிஐடி

சிபிசிஐடி

இப்படி இருக்கையில், கடந்த மாதம் 14ம் தேதி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். அதற்கேற்றார் போல சிபிசிஐடி காவல் துறையினரும் முழு வீச்சில் தங்கள் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் உச்சமாக ஆயுதப்படை காவலர்கள் சிலரை சிபிசிஐடி தனது வலையத்திற்குள் கொண்டு வந்தது. பிப்.7ம் தேதி வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை வீரர் முரளி ராஜா உள்ளிட்ட 8 பேரிடமும், இதனையடுத்து பிப்.8ம் தேதி இரண்டு ஆயுதப்படை காவலர்களிடமும், பிப்.9ம் தேதி 4 ஆயுதப்படை காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை

விசாரணை

இந்த காவலர்களில் முரளிதரனை தவிர மீதமுள்ள காவலர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றினாலும், அவர்கள் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் முரளிதரனுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருந்துள்ளனர். வேங்கைவயல் விவகாரம் குறித்த தகவல்களை இவர்கள் வெவ்வேறு குழுக்களுக்கு பகிர்ந்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் இவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

புகார் மனு

புகார் மனு

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தங்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி காவல்துறையினரும் வற்புறுத்துவதாக வேங்கைவயல் கிராமத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். புகாரில், "தனிப்படை போலிசாரை போலவே சிபிசிஐடி போலீசாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள். இக்காவலர்கள் திருச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று தகாத வார்த்தைகளால் பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+