"மக்கள் தான் முக்கியம்! 8 வழி சாலை திட்டத்தை திணிக்க மாட்டோம்.." மத்திய அமைச்சர் திட்டவட்டம்
புதுக்கோட்டை: திருமயம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் விகே சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் 8 வழிச் சாலை திட்டம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பல மத்திய அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்வதை வாடிக்கையான ஒன்றாகவே வைத்துள்ளனர். பல மாவட்டங்களுக்குச் செல்லும் அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி இப்போது சாலை போக்குவரத்து மற்றும் விமான துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தமிழகம் வந்துள்ளார்.

விகே சிங்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மூலம் விமானம் மலம் மதுரைக்கு வந்த அமைச்சர் வி.கே. சிங்க கடந்த சில நாட்களாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்கிடையே நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக சார்பில் நாடாளுமன்ற குழுக் கூட்டம் திருமயம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் விகே சிங் கலந்து கொண்டார்.

மத்திய அமைச்சர்
இந்தக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களை எப்படி மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து அமைச்சர் விளக்கினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விகே சிங் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக வரும் காலத்தில் டோல்கேட்கள் எப்படி மாற்றப்படும் என்பது குறித்தும் 8 வழிச் சாலைகள் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

டோல்கேட்
இதில் பேசிய அமைச்சர் விகே சிங், "டோல்கேட் காலம் முடிந்த பிறகு, புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவோம்.இந்த புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் இப்போது சோதனை செய்து வருகிறோம்.. வெளிநாடுகளில், டோல்கேட்கள் இல்லாமல் அதிநவீன கேமரா மூலம் கார் எண்களைப் போட்டோ எடுத்து அதில் இருந்து பணம் வசூலிக்கப்படும் அந்த முறையை இந்தியாவில் கொண்டு வரவுள்ளோம். இதற்கான முதற்கட்ட சோதனை இப்போது நடைபெற்று வருகிறது. இப்போதுள்ள முறையில், சிலர் டோல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்கிறார்கள். அந்தப் பிரச்சினையும் சரி செய்யப்படும்.

புதிய தொழில்நுட்பம்
நாம் இப்போது ஒவ்வொரு 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஒரு டோல்கேட்டை அமைந்துள்ளோம். புதிதாகப் பாலம் கட்டப்பட்டால், அருகிலேயே டோல்கேட் அமைக்கப்படும். டோல்கேட்டில் வசூலிக்கப்படும் பணம் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள், மராமத்து பணிகளுக்காகச் சுழற்சி முறையில் செலவிடப்படும்.. பயண தூரம் மற்றும் நேரத்தைக் குறைக்க மத்திய அரசு, கிரீன் பீல்ட் அலைன்மென்ட் என்ற புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது நகருக்குள் வாகனம் வராமல் நகரைச் சுற்றியே செல்லும் வகையில் புதிய சாலைகள் அமைக்கப்படும்" என்றார்.

8 வழிச்சாலைகள்
தமிழ்நாட்டில் 8 வழிச்சாலைகள் குறித்து மக்கள் போராட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வி.கே. சிங், "முறையான சட்டத்தைப் பின்பற்றியே நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறோம். அதேநேரம் கையகப்படுத்த முடியாமல் போனாலோ.. அல்லது மக்களுக்கு இத்திட்டத்தின் மீது விருப்பம் இல்லையென்றால்.. அதை மக்களிடம் புகுத்த போவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications