புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெலஸ்கோப் மூலம் நிலவை படம் பிடித்த 16 வயது புனே சிறுவன்.. 55 ஆயிரம் புகைப்படங்களை இணைத்தது எப்படி?

Google Oneindia Tamil News

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் நிலவின் மிகவும் தெளிவான மற்றும் அதிக தகவல்களையுடைய புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

புனேவை சேர்ந்த பிரதாமேஷ் ஜாஜூ தான் எடுத்த 55 ஆயிரம் புகைப்படங்களின் கலவையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பூமியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படம் தெளிவாக இருப்பதால் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

புனேவை சேர்ந்தவர் பிரதாமேஷ் ஜாஜூ. 16 வயது சிறுவன். இவருக்கு வானியலில் அதிக ஆர்வம் உள்ளது. 10 ஆம் வகுப்பு படிக்கும் இவர் தற்போது கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மனைவி நகைகளை விற்று.. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்கள்!.. தீயாய் பரவும் புகைப்படம்! மனைவி நகைகளை விற்று.. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்கள்!.. தீயாய் பரவும் புகைப்படம்!

புகைப்படம்

புகைப்படம்

இதனால் வானியல் குறித்த புகைப்படத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிரதாமேஷுக்கு ஏற்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வானியல் புகைப்படக்கலை குறித்து பிரதாமேஷ் ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் புனேவில் உள்ள வித்யா பவன் உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறேன். கொரோனா காலம் என்பதால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்துவிட்டார்கள். என்னிடம் தொலைநோக்கி அதாவது டெலஸ்கோப் வீட்டில் இருந்தது.

55 ஆயிரம் புகைப்படங்கள்

55 ஆயிரம் புகைப்படங்கள்

எப்போதும் அதனுடனே நான் எனது பொழுதை கழிப்பேன். இதை வைத்து யூடியூப்களில் இது போல் வானியல் நிகழ்வுகளை எப்படி துல்லியமாக படம் பிடிப்பது என்பதை கற்று தேர்ந்தேன். இதையடுத்து நான் எடுத்த நிலவு குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. நிலவின் புகைப்படத்தை எடுக்க எனக்கு 4 மணி நேரம் ஆயிற்று. ஆனால் எடுத்த புகைப்படங்களை செயலாற்றவும் எடிட்டிங் செய்யவும் 3 நாட்கள் பிடித்தனர். நான் வெவ்வேறு ஆங்கிளில் 55 ஆயிரம் வரை புகைப்படங்களை எடுத்தேன்.

3ஆவது பாதி

3ஆவது பாதி

அவற்றை ஒவ்வொன்றாக இணைத்தேன். இதனால் என்னால் 3 டி வடிவத்தில் நிலவின் 3ஆவது பாதியை நான் புகைப்படம் எடுத்தேன். இந்த 55 ஆயிரம் படங்களையும் இணைத்து எடிட்டிங் செய்ததில் இந்த முழு படம் 186 ஜிபி கொண்டிருந்தது. இந்த பணிக்காக எனது லேப்டாப்பில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் ஸ்பேஸ் கருதி நான் அழித்துவிட்டேன்.

டெலஸ்கோப்

டெலஸ்கோப்

நான் பயன்படுத்திய செலட்டிரான் 5 கேசிகிரைன் ஓடிஏ டெலஸ்கோப். வானியலை படம் பிடிக்கும் அதி வேக கேமராக்கள் உள்ளன. GSO 2X BARLOW என்ற லென்ஸ் இருந்ததால் ஒரு இமேஜை 3 மீட்டர் தூரத்தில் இருந்து எடுப்பது போன்று ஃபோகஸ் செய்ய முடியும். நான் முதல் நிலவின் பல்வேறு பகுதிகளை வீடியோக்களாக எடுத்தேன். ஒவ்வொரு வீடியோவும் 2000 பிரேம்கள் இருந்தன. இவற்றை ஒரே படமாக ஒன்றிணைந்தேன். இதற்காக 38 வீடியோக்கள் எடுத்தேன். அவை இப்போது 38 படங்களாக உள்ளன.

நானாக எடிட் செய்தேன்

நானாக எடிட் செய்தேன்

ஒவ்வொரு வீடியோவையும் நானாகவே எடிட் செய்து போட்டோஷாப்பில் அவற்றை ஒவ்வொன்றாக ஒட்டினேன். பசில் கேமை அடுக்குவது போல் அடிக்கினேன். கடைசியில் இப்படி அழகான புகைப்படம் கிடைத்துள்ளது. இந்த புகைப்படங்களுக்காக நான் PIPP, Autostakkert, IMPPG, Registax 6, Adobe Photoshop and Lightroom ஆகிய சாப்ட்வேர்களை பயன்படுத்தியுள்ளேன் என்றார்.

English summary
16 years old boy from Pune has captured picture of the moon which goes viral in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X