கொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்
புணே: மகாராஷ்டிர மாநிலத்தில் புணே நகரில் தனது வீட்டுக்கு அருகே சேவல் ஒன்று வந்து நின்று கூவுவதால் தனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் புணே நகரில் சோம்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தினமும் அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சேவல் ஒன்று அதிகாலையில் கூவுகிறதாம்.

இதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் புகாரை பெற்று கொண்டனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில் பெண் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டோம். இதுகுறித்து விசாரித்த போது அந்த பெண் அவரது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் அங்கு அந்த பெண் இது போன்ற ஒரு புகாரை கொடுத்து விட்டு சென்றுவிட்டார் என கூறினர்.
இதுகுறித்து புகார் கொடுத்த அந்த பெண்ணின் சகோதரியை போலீஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில் புகார் கொடுத்த பெண் சற்று மனநிலை சரியில்லாதவர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் இந்த விவகாரத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications