‛‛மீண்டும் மோடி பிரதமரானல் நாட்டில் தேர்தலே இருக்காது’’.. நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் ‛அட்டாக்’
புனே: மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்து மோடி பிரதமரானால் இந்திய வரைபடமே மாறிவிடும். மணிப்பூர் போன்ற நிலை தான் இந்தியா முழுவதும் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பரபரப்பாக பேசியுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. ஜுன் 1ல் 7 வது கட்ட தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 2014, 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிக இடங்களை வென்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனே கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் நடந்த விழாவில் பரகலா பிரபாகர் பேசியதாவது:
மீண்டும் மோடி பெரும்பான்மையுடன் பிரதமரானால் நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் தேர்தல் எதுவும் இருக்காது. நாட்டில் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும். இந்திய வரைபடமே மாறும். அதனை இந்தியா என்று ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கும்.
நாடு முழுவதும் லடாக், மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும். மணிப்பூரில் குக்கி-மைத்தேயி மக்கள் இடையேயான மோதல்கள் போன்று நாடு முழுவதும் பதற்றான சூழல் ஏற்படும். பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்கள் செங்கோட்டையில் இருந்தே நேரடியாக வரும். தேர்தல் பத்திர ஊழல் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. வரும் தேர்தல் என்பது வெறும் 2 கூட்டணிகள் இடையேயானது அல்ல. மாறாக இந்த தேர்தல் என்பது பாஜக மற்றும் இந்திய மக்களுக்களின் இடையே நடக்கிறது என்பதை நினைவில் வைத்த கொள்ள வேண்டும். '' என்றார்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, ‛இந்தியா எனும் கோணல் மரம்'' என்ற தலைப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்த பகரலா பிரபாகர் நாட்டில் தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications