பவுன்டரி அடித்த மறு நொடி! திடீரென சரிந்த கிரிக்கெட் வீரர்.. துடிதுடித்து பலி! இப்படி கூட சாவு வருமா
புனே: இப்போதெல்லாம் யாருக்கு எப்போது மரணம் வரும் என்பதே தெரிவதில்லை.. நல்லா பேசிக் கொண்டு இருப்பவரும் கூட நொடியில் உயிரிழக்கும் பல சோகமான சம்பவங்கள் நடக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் புனேவில் நடந்துள்ளது. பவுன்டரி அடித்த வீரர், அடுத்த நொடியே அப்படியே சாய்ந்து உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் உள்ள கார்வேர் ஸ்டேடியத்தில் இன்று வியாழக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அதில் விளையாடிய 35 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் திடீரென இதய செயலிழப்பால் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த வீரர் இம்ரான் படேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழப்பு: தொடக்க வீரரான அவர் பேட்டிங் செய்ய வந்துள்ளார். இருப்பினும் ஆடுகளத்திற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு மற்றும் தோள்பட்டையில் வலி எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அவர் கள நடுவர்களிடமும் புகார் அளித்துள்ளார். நடுவர்களும் அவருக்கு ஏதோ சிக்கல் என்பதை உணர்ந்து, அவரை ஆடுகளத்தை விட்டு வெளியேற அனுமதித்துள்ளனர். இருப்பினும், பெவிலியன் திரும்பும் போது, இம்ரான் நிலைகுலைந்து அப்படியே சரிந்தார்.
இந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அந்த சம்பவம் முழுக்க கேமராவில் பதிவாகியுள்ளது. இம்ரான் எதிர்பாராத விதமாகச் சரிந்த நிலையில், மைதானத்தில் இருந்த மற்ற வீரர்கள் அவரை நோக்கி ஓடினர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இம்ரான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பவுன்டரி கூட அடித்தார்: அவர் சரிந்து விழுவதற்கு முன்பு வரை இம்ரானின் உடல்நிலை அதுவரை நன்றாகவே இருந்துள்ளது. ஒரு ஆல்-ரவுண்டரான அவர் போட்டி முழுக்க களத்தில் ஆக்டிவாகவே இருந்துள்ளார். முந்தைய பாலில் தான் பவுன்டரி கூட அடித்துள்ளார். பாலை அடித்துவிட்டு ஓடி மறுமுனைக்கும் சென்று இருக்கிறார். இப்படி ஃபிட்டாக இருந்தவருக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தவருக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரது சக வீரர் ஒருவர் கூறுகையில், "அவருக்கு எந்தவொரு உடல்நிலை பிரச்சினையும் இருந்தது இல்லை. மிகவும் ஃபிட்டாக இருந்தார். அவர் மிகச் சிறந்த ஒரு ஆல்ரவுண்டர். அவருக்கு இப்படி ஆனதை ஏற்கவே முடியவில்லை.. இன்னுமே எங்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை" என்கிறார் சோகத்துடன்..
யார் இவர்: இம்ரானுக்கு ஒரு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அதில் கடைசி மகள் நான்கு மாதங்கள் முன்பு தான் பிறந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இம்ரான் படேல் உள்ளூரில் சொந்தமாக கிரிக்கெட் அணியையும் வைத்துள்ளார். மேலும், அங்குள்ள பிரபல ஜூஸ் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். உள்ளூரில் பிரபலமாக இருந்த அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
முதல்முறை இல்லை: முன்னதாக கடந்த செப். மாதம் இதேபோல ஹபீப் ஷேக் என்ற மற்றொரு கிரிக்கெட் வீரரும் இதே புனேவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே களத்தில் உயிரிழந்தார். இருப்பினும், ஹபீப்பிற்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தது. ஆனால், இம்ரானுக்கு அப்படி எந்தவொரு பாதிப்பும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications