திமுகவில் 13 பேரிடம் லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கு.. ஜேபி நட்டா பரபரப்பு குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: திமுகவில் 13 பேரிடம் லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறதாம் என்றும் ஏப்ரல் 19-ந்தேதி நீங்கள் அளிக்கும் வாக்கு, ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு ஊழல்வாதிகளை ஜெயிலில் வைத்திருக்கும் என்றும் அல்லது பெயில் வாங்க அலைய வைத்திருக்கும் என்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் என்றென்றும் குரல் கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் சேவை டெல்லிக்கு தேவை என்று கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பிரசாரம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். சுயேட்சையாக களம் இறங்கி உள்ளதால் பலாப்பழம் சின்னம் தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது. மக்களிடையே கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆதரவு திரட்டி வந்த ஓ பன்னீர்செல்வம் இறுதிகட்ட பரப்புரையில் இறங்கி உள்ளார்.. ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் நேற்று வாகன பேரணி சென்று பிரச்சாரம் செய்தார்..
இதற்காக நேற்று காலை மதுரை வந்த ஜேபி நட்டா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 10.25 மணி அளவில் பரமக்குடி சரஸ்வதி நகர் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தல் வந்தார். தமிழ்நாடு பாரம்பரியப்படி வேட்டி-சட்டை அணிந்து வந்த நட்டாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தர்மர் எம்.பி., ரவீந்திரநாத் எம்.பி., ஆகியோர் வரவேற்றனர். பாஜக தொண்டர்கள் பலர் உற்சாக குரல் எழுப்பினார்கள்.. தொடர்ந்து பிரசார வாகனம் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துடன் பிரச்சாரம் செய்தார் ஜேபி நட்டா.
பரமக்குடியின் சந்தை கடை பகுதி, பஸ் நிலையம், ஆர்ச் வழியாக காந்தி சிலை வரை சுமார் 45 நிமிடம் வாகன பேரணியாக சென்று ஜே.பி.நட்டா பிரச்சாரத்தின் போது பேசுகையில்,, ஓ.பன்னீர்செல்வம் மிகச்சிறந்த தகுதியான திறமை வாய்ந்த தலைவர். அவருக்காக நான் இங்கு வந்து பிரசாரம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி . தமிழ்நாட்டு மக்களுக்காக என்றெனறும் குரல் கொடுப்பவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படிப்பட்டவரின் சேவை டெல்லிக்கு தேவையாகும். அதற்காக நீங்கள் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. 2047-ல் பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமைய வேண்டும் என்பதற்காக பா.ஜனதா கூட்டணி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு வீடு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி உள்ளோம். பாஜக அரசு, ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கி வருகிறது. 25 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேலே வந்திருக்கிறாரகள்.
அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தது மிகப்பெரிய சாதனையாகும். தமிழ்நாட்டிற்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை விட நான்கு மடங்கு நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீது பிரதமர் மோடி எப்போதுமே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் சாலை வசதியை மேம்படுத்த ரூ.48 ஆயிரம் கோடி வழங்கி உள்ளோம்.
திமுக எப்போது வாரிசு அரசியல் செய்கிறது.. கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கிறது. திமுகவில் உள்ள 13 பேரிடம் லட்சம் கோடிக்குமேல் சொத்து உள்ளது. ஏப்ரல் 19-ந்தேதி நீங்கள் அளிக்கும் வாக்கு, ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு ஊழல்வாதிகளை ஜெயிலில் வைக்க போகிறது. அல்லது பெயில் வாங்க அலைய வைக்கும்.. மோடியின் கரத்தை வலுப்படுத்த நீங்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications