Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதம் மாற சொல்றாங்க! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி! மண்ணெண்ணெய் கேனுடன் மடக்கிய போலீஸ்..!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்றம் செய்யக் கோரி தன்னை சிலர் கட்டாயப்படுத்துவதாக கூறுவதால் மன உளைச்சல் அடைந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Recommended Video

    மதம் மாற சொல்றாங்க! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண் - வீடியோ

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறும் மாறு அக்கிராமத்தில் உள்ள சிலர் கட்டாயப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

    கட்டாய மதமாற்றம்

    கட்டாய மதமாற்றம்

    இதே காரணத்தை கூறி சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு வளர்மதியின் மகனை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்த வளர்மதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

    ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி

    ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    பகீர் புகார்

    பகீர் புகார்

    கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி தஞ்சையில் படித்த வந்த பிளஸ்2 மாணவி லாவண்யா, தனது பள்ளியில் உள்ளவர்கள் தன்னை மதமாற்றம் செய்யக் கோரி வற்புறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் 15ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த மதமாற்றம் இல்லை என போலீசார் கூறிய பிறகே விவகாரம் அடங்கியது.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இந்நிலையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகக் அடிக்கடி கூறப்படும் நிலையில், தமிழக அரசு இதனை தடுக்க நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+