அட்ராசக்க! மீனவர்கள் மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட 10 ‘சரவெடி’ அறிவிப்புகள்: மொத்தமா பிடிச்சிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முத்தான அறிவிப்புகளை மீனவர்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, படகு கட்ட மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

CM Stalin made 10 new announcements for fishermen welfare

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 10 அறிவிப்புகள்:
1. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை, 8,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 1,79,000 பேர் இதில் பயன்பெறுவார்கள். அதோடு 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
2. மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும்.
3. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
4.1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 % மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
5. தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

6. மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராகவும், இயந்திரம் பொறுத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு 4000 முதல் 4400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
7. தங்கச்சி மடம் மீன்பிடி துறைமுகம் அமைதற்கான ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடங்கப்படும். குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் பணிக்கான ஆய்வுகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
8.மீனவர்கள் விபத்து காப்பிடு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

9. மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு நிதி 1,70,000 ரூபாயிலிருந்து 2,40,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
10. மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு மற்றும் படகுகளில் பாதுகாப்பை உறுதி செய்யு தூண்டில் வலை அமைக்க கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு இருப்பதால் நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+