ராமநாதபுரம் உமா.. 2 நாள் முன்பு தான் மாமானார் பற்றி அப்படி சொன்னார்.. கேட்டு ஆடிப்போன போலீஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தந்தை ஜெயராஜிடம் உமா என்பவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போதே மாமானார் குறித்து திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார். அதுபோலவே சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள முத்து விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது ஆகும் முதியவர் ஜேசு. இவரது மகன் ஆரோக்கிய பிரபாகரன். இவருக்கு 36 வயது ஆகிறது. ஆரோக்கிய பிரபாகரன் தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா (32) என்பவரை பல வருடம் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மரிய ஜெலினா (11), ஜெமி தெரசா (7) என 2 மகள்கள் இருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் ஆரோக்கிய பிரபாகரனும், இளைய மகள் ஜெமி தெரசாவும் இறந்துவிட்டனர். இதனால் உமாவும், தனது மூத்த மகள் மரிய ஜெலினாவும் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்கள்.
இந்தநிலையில் மாமனார் ஜேசு, சொத்து பிரச்சினையில் உமாவை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார். பின்னர் கிராம பெரியோர்கள் உமா மற்றும் ஜேசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் காரணமாக மீண்டும் உமா மட்டும் தனது கணவர் வீட்டில் வசித்தார். அவரது மகள் மரிய ஜெலினா உமாவின் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தந்தை ஜெயராஜிடம் உமா செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது மாமனார் ஜேசு, தன்னை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சிக்கிறார் என பதற்றத்துடன் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஜெயராஜ், முத்து விஜயபுரத்திற்கு ஓடி வந்து வீட்டில் வந்து பார்த்தபோது உமா தீயில் கருகி பலத்த காயங்களுடன் கிடந்தார். இதனால் கதறி அழுதபடி உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு உமா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனிடையே தீக்காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட உமா, அங்கிருந்தவர்களிடம் தன்னை மாமனார் ஜேசுதான் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்துள்ளேன் என தெரிவித்தாராம்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் முதல் கட்டமாக தற்கொலை என வழக்கு பதிவு செய்தார்களாம். பின்னர் இது தொடர்பாக ஜேசுவிடம் நடத்திய விசாரணைக்கு பின்னரே சொத்து பிரச்சினையில் உமா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கீழத்தூவல் போலீசார், ஜேசு மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications