"சேர்மன்" கணவரை கட்டிப்பிடித்து அழுத மனைவி.. புன்னகைத்த திமுக "சேது கருணாநிதி".. களிப்பில் பரமக்குடி
53 வருடங்களுக்கு பிறகு பரமக்குடியில் திமுக வென்றுள்ளது
ராமநாதபுரத்தில் கணவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்ற போது மனைவி கட்டித் தழுவி, அழுது ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளை கொண்டது... இதில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் திமுக 19 வார்டுகளிலும், அதிமுக 10 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும் பாஜக 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆகவே திமுக 53 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

குணசேகரன்
நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு மதிமுகவை சேர்ந்த 33-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள குணசேகரன் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 2 முறை நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் மதிமுக பரமக்குடி நகர செயலாளராக இருந்து பின்பு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து தற்போது மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும் ஹாசினி என்ற மகளும் ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி வாய்ப்பு
நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பரமக்குடி தெற்கு நகர் பொறுப்பாளர் சேது கருணாநிதி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 2 முறை நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.. ஒருமுறை அவரது மனைவி சுதா ராணி நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்... 2011-ல் சேது கருணாநிதி நகர் மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளார். இந்நிலையில், நகர்மன்ற தலைவர் பதவிக்கு சேதுகருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்..

ஆனந்த கண்ணீர்
நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பாக 24வது வார்டில் 677வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சேது கருணாநிதி ஒருவரை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நகர் மன்றத் தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வாகியுள்ளார்... அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். அவருக்கு கட்சி சார்பாக நிர்வாகிகள் உறவினர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

ஆனந்த கண்ணீர்
அந்த நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது மனைவி வாழ்த்து சொல்ல வரும் பொழுது, நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கணவரான சேது கருணாநிதியின் நெஞ்சில் சாய்ந்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது... 2 முறை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், இப்போது வெற்றி பெற்றுள்ளதால் ஆனந்தக்கண்ணீரை பொழிந்தார் அவரது மனைவி.












Click it and Unblock the Notifications