ஓபிஎஸ்க்கு புதுசிக்கல்.. பிரசாரத்தில் தொண்டருக்கு பணம் வழங்கிய வீடியோ வெளியானது.. விதிமீறலா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தொண்டருக்கு ரூ.500 வழங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதோடு தேர்தல் விதிமீறல் செய்துள்ளதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது.

Its the election violation question raises after O panner Selvam gives Rs 500 to his supporter in Ramanathapuram campaign

தற்போது எம்எல்ஏவாக உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓ பன்னீர் செல்வம் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத்தாக்கலை அவர் செய்துள்ளார். சுயேச்சையாக களமிறங்கி உள்ள ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தேர்தல் பிரசாரத்தின்போது ஓ பன்னீர் செல்வத்தை தொண்டர் ஒருவர் தனது குழந்தையுடன் சந்திக்கிறார். அந்த தொண்டர் தனது குழந்தையை ஓ பன்னீர் செல்வத்திடம் வழங்குகிறார். ஓ பன்னீர் செல்வம் குழந்தையை சிறிது நேரம் தனது மடியில் வைத்துள்ளார். இந்த வேளையில் தொண்டர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழந்தையை சேர்த்து போட்டோ எடுத்து கொள்கிறார்.

அதன்பிறகு குழந்தையை தொண்டரிடம் வழங்கிய ஓ பன்னீர் செல்வம் தனது சட்டைப்பையில் இருந்த ரூ.500யை எடுத்து தொண்டரிடம் வழங்குகிறார். இந்த வீடியோ இப்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இந்த வேளையில் வேட்பாளர்கள் யாருக்கும் பணம் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இத்தகைய சூழலில் தான் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் நடத்தை விதியை மீறிவிட்டதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

இது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவரது பெயரில் மேலும் 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் இந்த தொகுதியில் 6 ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சுயேச்சை சின்னம் தான் வழங்கப்படும்.

இந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் மற்ற ஓ பன்னீர் செல்வங்களுக்கு கிடைக்கலாம். இது முன்னாள் ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் தற்போது அவர் ரூ.500 வழங்கிய வீடியோ வெளியாகி மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+