ராமேஸ்வரம் கோயில் அருகே திடீர் தீ விபத்து.. சாமர்த்தியமாக தீயை அணைத்த காவலருக்கு.. குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் திருக்கோவில் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் சாமர்த்தியமாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Recommended Video

    ராமேஸ்வரம் கோயில் அருகே திடீர் தீ விபத்து.. சாமர்த்தியமாக தீயை அணைத்த காவலருக்கு.. குவியும் பாராட்டு

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் நான்கு கோபுர வாசல்களிலும் 20க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன இந்நிலையில் தெற்கு கோபுர வாசல் தனி நபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அங்கு உணவைத் தயாரித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின் இணைப்புகளில் தீப்பொறி பட்டதில் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

    Major fire accident averted at police successfully extinguished fire broke out near Rameswaram temple

    தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வெளியே ஓடி வந்த நிலையில் திருக்கோவில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ரஜினி முத்து முதலில் உணவகத்தின் மின்சாரத்தைத் துண்டித்தார்.

    பின்னர் எதிரே உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்த தீயணைப்பு பாதுகாப்பு உபகரணம் எடுத்துச் சாமர்த்தியமாக மளமளவெனப் பிடித்து எரிந்த தீயை அணைத்தார். அப்போது உணவக ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் உதவிக்கு வர தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உணவகத்தில் இருந்த தீயை முழுமையாக அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பு சாமர்த்தியமாகச் செயல்பட்ட காவலர் ரஜினி முத்துவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+