“செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்”.. அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த ரிப்ளை!
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடக்கிறது எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு "செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்" என அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடைபெறுகிறது, திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால் உதயநிதியும் இன்பநிதியும் மேனேஜர்களாக வருவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாட்டில் டைம்பாஸுக்காக கொலைகள் நடைபெறுகிறது என செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். செல்லூர் ராஜு ஒரு காமெடி பீஸ்" எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "போக்குவரத்து துறை என்பது பொதுமக்களுக்கு சேவையாற்றும் துறை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டுமே பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளதால் தமிழக முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறுகின்றனர். அதிகாரிகள் எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்தால் போதும். இந்தியா என்பது ஒரு நாடு. நாம் இந்தியர்கள் அடுத்து தமிழர்கள் எல்லாரும் நமது சகோதரர்கள்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விடுதி காப்பாளர், சமையலர் பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 1353 விடுதிகளில் 1264 விடுதிகள் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒன்பது புதிய சொந்த விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications