அத்துமீறும் இலங்கை படை.. மீனவர்கள் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன்! நாம் தமிழர் சீமான் பேச்சு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து ஆவேசமாகப் பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. "எங்கள் மண் எங்கள் உரிமை" என்ற தலைப்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும் குறிப்பிட்ட அவர் இது குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
சீமான்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "திமுகவை ஒருவராலும் வீழ்த்த முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். பல சுவரொட்டிகளில் நிரந்தர முதல்வர் என எழுதி வைத்தவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கு வீழ்த்த முடியாதது என்று எதுவுமே கிடையாது.
உலகின் வெல்ல முடியாத படை என்று ஒன்று இருந்ததே இல்லை என்றே ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறுகிறார். இப்போது ஆழ்பவர்களிடம் கொள்கை கோட்பாடு என எதுவுமே இல்லை.
தமிழர்கள்: இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வகுத்துக் கொடுத்த அம்பேத்கர் இந்தியாவை இந்து நாடு எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்றே கூறியிருக்கிறார். இந்த நாடு இந்த நிலப்பரப்பு முழுக்க பரவிக் கிடந்தவர்கள் தமிழர்கள். எனது மூதாதையர்களின் மொழி கூட தமிழ் தான் என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார்.இந்த நாடு என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரே ஒரு இனத்திற்குத்தான் உரிமை உண்டு, அது தமிழினத்திற்குத் தான் என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியுள்ளார்.
மேற்கு வங்கத்தை 21 ஆண்டுகள் ஆண்ட ஜோதி பாசுவும் அம்பேத்கர் சொல்வதை ஏற்பதாகவே கூறியிருக்கிறார் இந்திய நிலப்பரப்பு முழுக்க பரவி வாழ்ந்தவர் தமிழர். தெற்காசிய முழுக்க தமிழர்கள் பரவி வாழ்ந்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்களே கூறியுள்ளனர். அப்படியிருந்த தமிழர்கள் குறுகிப் போய் அரசியல் வலிமை இழந்து, உரிமை இழந்து வாழ வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சமூகம் மீண்டும் எழுச்சி பெற இதுவே சரியான காலகட்டமாக இருக்கும். தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சிக்குக் காரணமாக இருக்கும். அதற்குத் தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும். இது நிச்சயம் மிக விரைவில் நடக்கப் போகிறது" என்று அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்குக் குண்டு: தொடர்ந்து தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், "நான் முதல்வரானால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக மீனவர்கள் கையில் வெடிகுண்டு ஆயுதம் கொடுத்து அனுப்புவேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்ட சீமான் இதன் காரணமாகவே நாம் தமிழர் கட்சி அங்கேயே நடத்தி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications