Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இபிஎஸ் இல்லை.. ஓபிஎஸ், டிடிவியை சந்திக்க மறுத்த மோடி! இன்னொருவருக்கு வாய்ப்பு! யார் அவர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் இந்த வருகையின்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் அவரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்கள் 3 பேரும் பிரதமர் மோடியை சந்திக்கப்போவது இல்லை என்றும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலுக்கு நடுவே புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியாக பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டரில் இருந்து பாம்பனுக்கு வருகிறார். அதன்பிறகு பாலத்தை திறந்து வைத்துவிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

pampan-railway-bridge-open-pm-modi-did-not-give-time-to-meet-ops-and-ttv-dhinakaran-in-tamil-nadu-v

அதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி பறக்கிறார். பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாட்டில் பயணத்தில் பல தலைவர்கள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளனர். இதற்காக அனுமதியும் கோரப்பட்டது.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பல தலைவர்களுக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜக சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க அண்ணாமலை உள்பட பல முக்கிய நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு அனுமதி என்பது கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறினார். அதோடு மோடியை சந்திக்க அவர் அனுமதி கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் முகாமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்ட நிலையில் கிடைக்கவில்லை. இதனால் இன்று ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில் பாஜக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜிகே வாசன் பிரதமர் மோடியை நேரில் வரவேற்க உள்ளார்.

மேலும் இன்று பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் இருகட்சிகளும் கூட்டணிக்கு தயாராகி வருகின்றன. இதனால் தமிழகம் வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமித்ஷாவுடன் கூட்டணி பற்றி பேசிய நிலையில் பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். செங்கோட்டையனிடம் தனித்தனியாக பேசி வருகின்றனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+