Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சுக்கு வந்த 3 மாணவிகள்.. நோட்டமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத் தந்தை கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய பங்குத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள தேவாலயத்திற்கு அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய வருவார்கள். அந்த வகையில் இந்த தேவாலயத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் பிரார்த்தனை செய்ய வந்திருந்தனர்.

இவ்வாறு இவர்கள் தனியார் வருவதை அங்கு பங்குத்தந்தையாக இருக்கும் ஜான் ராபர்ட் என்பவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களிடம் தினந்தோறும் நன்றாக பேசி பழகியுள்ளார். மேலும் நன்கு படிக்க விசேஷ பிரார்த்தனைகளை நடத்துவதாகவும் அந்த மாணவிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

 மாணவிகள்

மாணவிகள்

இதை நம்பிய அந்த மாணவிகளும் ஜான் ராபர்ட்டுடன் நன்றாக பழகினர். ஒரு கட்டத்தில் அந்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஜான் ராபர்ட் குறித்து கூறினர். அவர்கள் மாணவிகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுக்க வைத்தனர்.

புகார்

புகார்

அந்த புகாரின்பேரில் ஜான் ராபர்ட்டை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே இது போன்றதொரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் போலீஸ் ஆயுத படை மைதானம் பகுதியைச் சேர்ந்த இன்பராஜின் மகன் மில்டன் கனகராஜ் (26). இவர் பாதிரியார் ஆவதற்கான படிப்பை முடித்துக் கொண்டு கேடிசி நகர் சிஎஸ்ஐ சர்ச்சில் பயிற்சி பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

வீட்டருகே வசித்த மாணவி

வீட்டருகே வசித்த மாணவி

இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒரு மாணவி, அவ்வப்போது சர்ச்சுக்கு வரும் போது கனகராஜுடன் பழகியுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியை கனகராஜ் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அந்த சிறுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்பராஜுடன் பழகி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்ததாகவும் தெரிகிறது.

அடுத்தடுத்த சம்பவங்கள்

அடுத்தடுத்த சம்பவங்கள்

இதையடுத்து பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து வருவதை அறிந்து அந்த சிறுமி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போல் அடுத்தடுத்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+