Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பஸ் ஸ்டாண்ட்" கிட்ட வந்துடுங்க.. சைஸா சொன்ன பெண் ஆபீஸர்.. நைசா வந்து நின்ற போலீஸ்.. கடைசியில பாருங்க

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும்கூட, இதற்கு முழு ஒத்துழைப்பு சில அதிகாரிகளிடமிருந்தே கிடைப்பதில்லை.
சொத்தையோ, நிலத்தையோ வாங்க வேண்டுமானால், பத்திரங்கள் மிகமிக அவசியமானது. இந்த பத்திரங்கள் இல்லாவிட்டால், சொத்தை அனுபவிக்க முடியாது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.

இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இதில் மோசடி பேர்வழிகள் பலரும் சிக்கி வருகிறார்கள்.

Fake Documents and rs14 lakhs seized from TN Sub Registrar in Ramanathapuram

அதேபோல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும்கூட, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் உலா வருகின்றன... இதில், விஏஓ உள்ளிட்ட சில அதிகாரிகளே நேரடியாக சம்பந்தப்பட்டதால், அதிரடியாக கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.

இப்படித்தான் பெண் அதிகாரி ஒருவரும் தற்போது அசிங்கமாக சிக்கிகொண்டுள்ளார்.. ராமநாதபுரம் வண்டிகார தெருவில், வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது..

சொத்து மதிப்பு: இங்கு பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின் மதிப்புக்கு ஏற்பவும் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த 18, 19-ம் தேதிகளில் சுபமுகூர்த்தநாள் என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப் பதிவு நடைபெற்றது.. அப்போது பத்திரப்பதிவுகளுக்கான கட்டணத்தைவிட, கூடுதல் பணத்தை ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் மூலம் பெத்துலெட்சமி வாங்குவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Fake Documents and rs14 lakhs seized from TN Sub Registrar in Ramanathapuram

லஞ்சப்பணம்: அதுமட்டுமல்ல, இந்த லஞ்சப்பணத்தை இவர் எப்போதுமே தன்னுடைய ஆபீசில் வாங்க மாட்டாராம்.. ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் என யாராக இருந்தாலும், லஞ்சம் கொடுப்பதாக இருந்தால், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வரசொல்லி விடுவாராம். புரோக்கர்களும் இவர் சொன்னபடியே, பஸ் ஸ்டாண்டுக்கு சென்று லஞ்சத்தை தந்து வந்திருக்கிறார்கள். இதெல்லாம் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, பெத்தலெட்சுமியை நேரடியாகவே கண்காணிக்க முடிவு செய்தனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று முன்தினம் சாயங்காலம், லஞ்சப்பணத்தை வாங்கி கொள்வதற்காக, பஸ் ஸ்டாண்டுக்கு போனார் பெத்துலெட்சுமி.. அங்கே ஏற்கனவே தயாராக புரோக்கர்கள் லஞ்சப்பணத்துடன் காத்து கொண்டிருந்தனர்.

விசாரணை: அவர்களிடம் அந்த பணத்தையும் வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார்.. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர்.. திடீரென போலீசார் தன்னை ரவுண்டுகட்டிவிடவும், கதிகலங்கி போனார் பெத்துலெட்சுமி.. அவரிடமிருந்து, கணக்கில் வராத ரூ.1.84 லட்சத்தை கைப்பற்றிய போலீஸார், அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணையும் மேற்கொண்டனர்.

Fake Documents and rs14 lakhs seized from TN Sub Registrar in Ramanathapuram

இதைத்தொடர்ந்து, பரமக்குடி புதுநகரில் உள்ள சார் பதிவாளர் பெத்துலெட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனையையும் மேற்கொண்டனர்.. அப்போது வீட்டிற்குள் கணக்கில் வராத ரூ.12 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தாராம் பெத்துலெட்சுமி.. இதைத்தவிர, நிறைய சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.. தொடர்ந்து சார் பதிவாளர் பெத்துலெட்சுமியிடம் போலீஸார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

பரபரப்பு: நேற்றுகூட தென்காசியில், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி என்பவர் லஞ்சம் வாங்கியதற்காக எசகுபிசகாக மாட்டியிருக்கிறார். புளியரை செக்போஸ்ட்டில் கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என ஏகப்பட்ட வாகன ஓட்டிகளிடம் நீண்டகாலமாகவே லஞ்சமாக பணத்தை வாங்கிவந்துள்ளார் இந்த 58 வயது பெண்.

பெண் அதிகாரிகள்: இவரது வீட்டிற்குள்ளும் லஞ்சஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இவரை பணிநீக்கம் செய்தும் துறைரீதியான உத்தரவு வந்துவிட்டது. இப்போது சார் பதிவாளர் பெண் அதிகாரியும் சிக்கி உள்ளார். பொறுப்பான பணியில், அதுவும் உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்களே இப்படி லஞ்சம் வாங்கி அசிங்கப்படுவது, கவலையையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+