ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடல் சீற்றம்.. மணல் மேட்டில் மோதும் அலைகள்.. அதே வேகத்தில் ரிட்டர்ன்.. என்னா ஆக்ரோஷம்!.. வீடியோ

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரேவி தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதால் ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரேவி புயல் நேற்று முன் தினம் இரவு இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடந்தது. இது மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையோ பாம்பன்- குமரி இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Rameswaram sea turns into very rough as Burevi is there

ஆனால் நேற்று மாலை 5.30 மணிக்கு புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் அது இன்று முழுவதும் மன்னார் வளைகுடா பகுதியிலேயே மையம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக பொங்கி வருகின்றன. படகுகளை நிறுத்தி வைத்திருக்கும் மணல் பரப்புகளிலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.

படகுகளை மீனவர்கள் மரங்களில் கட்டி வைத்துள்ளனர். புயல் வலுவிழந்ததால் ஓக்கி புயல் அளவுக்கு காற்று வீச வாய்ப்பில்லை. ஆனால் நல்ல மழை பெய்யும் என்றே தெரிகிறது.

English summary
Rameswaram sea turns into very tough as Cyclone Burevi stays there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X