Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் பீச்சில் ஒரே பரபரப்பு.. டக்கென ஒரே மினுமினுப்பு.. மிரண்ட மீனவர்கள்.. குவிந்த ராமநாதபுரம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.. போலீஸ் அதிகாரிகளும் திரளென குவிந்துள்ளனர்.. என்ன காரணம்?

வான்வழியில் கடத்தல் சம்பவங்கள் நடப்பதை போலவே, கடல்வழியிலும் கடத்தல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. அதிலும், இந்தியா-இலங்கை இடையே, ராமேஸ்வரம் கடல் வழியாக, தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், மருந்து பொருட்கள், மருந்து பொருட்கள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

Ramnad 10 kg gold bars thrown into the Rameswaram sea and what happened in the Ramanathapuram Beach

போலீஸ்: அதனால்தான், இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும், கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு, நேரடியாகவே ரோந்து படகில் சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவைகளையும் மீறி கடத்தல்கள் நடந்துவிடுகின்றன.. இப்படித்தான் கடந்த ஜூன் மாதம் நடந்த தங்கக்கடத்தல் மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது. மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து, ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், அந்த ஸ்பாட்டுக்கு விரைந்து போனார்கள்.

மண்டபம்: அப்போது, மண்டபத்திற்கும், வேதாளைக்கும் நடுவில் உள்ள கடல்பகுதியில், ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது... அதை நிறுத்துமாறு அதிகாரிகள் வார்னிங் தந்தும் நிற்கவில்லை. போலீஸை பார்த்துமே ஏதோ ஒரு பொருளை கடலில் தூக்கி தூக்கி வீசியெறிந்தார்கள். பிறகு நாட்டுப்படலிருந்தவர்களிடம் விசாரணையும் நடத்தினார்கள்.

அதே பகுதியில் மீண்டும் சோதனை நடத்தியபோதுதான், அவர்கள் தங்கத்தை கடத்தியது அம்பலமானது.. மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார்கள்..

நடுக்கடல் பார்சல்: நடுக்கடலில் வீசியது பார்சல்கள் தங்க கட்டிகள் என்றும் தெரியவந்தது.. அவர்கள் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும்... இதனால் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், மீனவர்கள் என பலரது உதவியுடன் தங்க கட்டிகளை தேடி கண்டுபிடித்தனர். ஆனால், எவ்வளவு கண்டெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

இதோ 2 நாட்களுக்கு முன்புகூட, வேதாளையில் தீவிர ரோந்து பணி நடந்தபோது, படகு ஒன்றில் மர்மநபர்கள் சிலர் பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது. கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்றுமடக்கினர். ஆனால், அதற்குள் படகிலிருந்தவர்கள், 10 கிலோ தங்க கட்டிகளை தூக்கி கடலில் வீசினார்கள்.. பிறகு திடீரென கடலில் குதித்து நீந்தி தப்பியும் விட்டார்கள்.

விசாரணை: இதில், 2 பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். படகில் எந்த பொருட்களும் இல்லை என்றாலும், கடலுக்குள் தங்க கட்டிகளை தேடும்பணி நடக்கிறது. நீரில் மூழ்கி பொருட்களை மீட்டு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை இன்று 3வது நாட்களாக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் 7 முதல் 10 கிலோ வரை இருக்கலாம் என்கிறார்கள். அவைகளை கண்டெடுத்தால்தான், நிஜமதிப்பு தெரியவருமாம்.. இதனால் மன்னார் வளைகுடா பகுதியே இன்றும் பரபரப்பாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+