ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 112 கிலோ அதிசயம்.. மீனவர்கள் செம்ம குஷி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வழக்கமாக எப்போதும்போல் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் சிக்கியுள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த மீன் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் மீனவர்கள்.
எழில் கொஞ்சும் ராமேஸ்வரம் கடலில் நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள், டால்பின், திமிங்கலம், கடற்பாசிகள் என ஏராளமான அரிய வைகயான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை மீன்கள் ராமநாதபுரம் கடலில் தென்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதிக்கு நாட்டுப் படகில் வழக்கம்போல மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். மீனவர்கள் மீன்களை எல்லாம் பிடித்துவிட்டு கரைக்கு நேற்று திரும்பியுள்ளனர்.
அப்போது, மீனவர்களின் வலையில் ஏராளமான பல வகையான மீன்கள் சிக்கியுள்ளன. அவற்றுடன் அரிய வகையான மஞ்சள் வால் சூரை மீனும் சிக்கியுள்ளது. சுமார் 112 கிலோ எடை கொண்ட அந்த சூரை மீன் 3 மீட்டர் நீளத்தில் இருந்துள்ளது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருந்த சூரை மீனை 4 மீனவர்கள் சேர்ந்து கரைக்கு தூக்கி வந்துள்ளனர்.
ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் இந்த மீன் மீனவர்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மஞ்சள் வால் சூரை மீனை கேரளாவில் உள்ள வியாபாரி ஒருவர் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். அரியவகை ராட்சத மஞ்சள்வால் சூரை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மஞ்சள் வால் சூரை மீன்கள் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிக ஆழமான பகுதியில் மட்டுமே காணப்படும். இந்த மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது மிகவும் அரிதாகும் என்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications