நடுக்கடலில் அக்கிரமம்.. தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை! தொடரும் அட்டூழியம்
ராமநாதபுரம்: ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர் அவரை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை தடுக்க வேண்டும் என பல முறை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இலங்கை கடற்படை அராஜகப்போக்கை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு சென்றதில் இருந்தே வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இலங்கை கடற்படை தாக்குதல், கைது சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்து இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் 300 க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப் படகுகளை மறித்து விரட்டி அடித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக மீன்கள் ஏதும் பிடிக்காமல் பதறியடித்துக்கொண்டு மீனவர்கள் கரைக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்படி பல முறை பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் அல்லாமல் புதிய பிரச்சனையாக கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீது 3 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications