சவூதியில் தென்பட்ட பிறை.. நெருங்கிய ஹஜ் பெருநாள் - இந்தியாவில் எப்போது தெரியுமா?
ரியாத்: அரபு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் நேற்று துல்ஹஜ் பிறை தென்பட்டதை தொடர்ந்து வரும் ஜூலை 9 ஆம் தேதி அங்கு பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஈத் உல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளையும் ஈத் உல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளையும் கொண்டாடி வருகின்றனர்.
ஹஜ் பெருநாளை பக்ரித் என்றும் தியாகத் திருநாள் என்றும் மக்கள் அழைப்பது உண்டு. அரபு மாதங்களின் அடிப்படையில் இந்த 2 பெருநாள்களும் பிறை பார்த்து கொண்டாடப்பட்டு வருகின்றன.

சவூதியில் ஹஜ் பெருநாள்
அந்த வகையில் கடந்த மே மாதம் ரமலான் நோன்பு நிறைவடைந்து அரபு மாதமான ஷவ்வால் முதல் நாளன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அரபு வருடத்தின் கடைசி மாதமான துல் ஹஜ் பிறை நேற்று சவூதி அரேபியாவில் பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து துல் ஹஜ் மாதத்தின் 10 வது நாளான ஜூலை 9 ஆம் தேதி சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

இன்று இந்தியாவில் பிறை பார்ப்பு
சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டாலே அதை சுற்றியுள்ள மற்ற அரபு நாடுகளிலும் பெரும்பாலும் அதே நாளில்தான் நோன்பு மற்றும் ஹஜ் பெருநாட்கள் கொண்டாடப்படும். அரபு நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட மறுநாள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பிறை பார்க்கப்படும். அந்த வகையில் இன்று இந்தியாவில் பிறை பார்க்கப்படும்.

தமிழ்நாட்டில் எப்போது பக்ரீத்?
தமிழ்நாட்டில் எங்காவது பிறை தென்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு அதை தலைமை காஜி முடிவு செய்து ஜூன் 10 ஆம் தேதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவார். இன்று பிறை தென்படாவிட்டால், தற்போதைய துல் கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்துவிட்டு ஜூலை 11 ஆம் தேதி ஹஜ் பெருநாள் என்று அறிவிப்பார். ஈகை திருநாள்

தியாகத் திருநாள்
தியாகத் திருநாள் என்பது துல் ஹஜ் மாதம் பிறை 10-ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது கொண்டாடுவதாகவும். அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications