ரொம்ப தப்பு.. கை வைக்க கூடாத இடத்தை தாக்கிய ஈரான்.. சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அட்டாக்
ரியாத்: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்துள்ள போர், இப்போது அந்த பிராந்தியம் முழுக்கவே பரவியுள்ளது. இஸ்ரேல் படைகளைக் குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதலில் இறங்கியுள்ள சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் மூடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் இப்போது மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு ஒரு குழப்பமான சூழல் மத்திய கிழக்கில் நிலவுகிறது. கிட்டத்தட்ட ஒரு பிராந்திய போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்
ஒரு பக்கம் இஸ்ரேல்- அமெரிக்கா படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தளங்கள் உள்ள நிலையில், அந்த இடங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் டிரோன்கள் ராஸ் டானுரா சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கியுள்ளது. இதையடுத்து அராம்கோ நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்த பதற்றமான சூழல் காரணமாக ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. சுமார் 13% வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்ட நிலையில், போர் தொடர்ந்து இதுபோல சுத்திகரிப்பு நிலையங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்றே அஞ்சப்படுகிறது.
சவுதி அராம்கோ நிறுவனத்தின் ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சவுதியின் முக்கிய சுத்திகரிப்பு மையமான இதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்பில் சீர்குலைவு ஏற்படும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
📌 Son dk.: İran, kritik bir saldırı gerçekleştirerek Aramco’yu hedef aldı.
— Hasan Sivri (@hasansivri_1) March 2, 2026
Aramco, Suudi Arabistan ekonomisinin ana damarı. Şirket, dünyanın en büyük ham petrol rezervlerine sahip. pic.twitter.com/w8ErxyV8x9
சவுதி சொல்வது என்ன
தாக்குதல் குறித்து அராம்கோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. எனினும், சவுதி பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ராஸ் தனூரா ஆலையை நோக்கி சென்ற இரண்டு ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதைத் தாண்டி சில டிரோன்களை ஆலையைத் தாக்கியதாகத் தெரிகிறது. உலக எண்ணெய் சந்தை தீவிர நெருக்கடியில் இருக்கும் நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
பாதிப்பு
இப்போது சர்வதேச தினசரி எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% கையாளும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இந்த நேரத்தில் அங்குக் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எங்கு தங்கள் கப்பல் தாக்கப்படுமோ என்ற அச்சத்தில் பல பல கப்பல் நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இதனால், உலகின் முக்கியமான எரிசக்தி வழித்தடத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளன.
ஏற்கவே முடியாது
முன்னதாக, தலைநகர் ரியாத் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதிகளை இலக்காகக் கொண்ட ஈரானின் கோழைத்தனமான தாக்குதல்களை முறியடித்ததாகச் சவுதி தெரிவித்தது. மேலும், தங்கள் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி அமெரிக்க அல்லது இஸ்ரேல் படைகள் பயன்படுத்தவில்லை என்பதையும் சவுதி தெளிவுபடுத்தியது.
இது தொடர்பாகச் சவுதி வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில், "ஈரானின் கோழைத்தனமான தாக்குதல்களைச் சவுதி அரேபியா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. எந்த ஒரு காரணத்தைச் சொல்லியும் இவற்றை நியாயப்படுத்த முடியாது. ஈரானைத் தாக்க எங்கள் வான்வெளி, நிலப்பரப்பை அனுமதிக்கமாட்டோம் எனச் சவுதி உறுதிப்படுத்தியுள்ளது என்பதை ஈரான் அதிகாரிகளுக்குத் தெரிந்தும் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதை ஏற்க முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications