'வாவ்'.. ஆமை வடிவில் பிரம்மாண்டமான மிதக்கும் நகரம்.. ரூ.65,000 கோடி செலவில்.. இத்தனை வசதிகளா?
ரியாத்: சவுதியில் கடலுக்கு மேலே ஆமை வடிவில் பிரம்மாண்டமான மிதக்கும் நகரத்தை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரூ.65,000 கோடி செலவில் கட்டப்படும் இந்த நகரத்தில் 19 தனி பங்களாக்கள், 64 அடுக்குமாடி குடியிருப்புகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன.
இதுவரை உலகில் வேறு எங்கும் கடலில் இத்தனை பெரிய மிதக்கும் நகரத்தை யாரும் வடிவமைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமை வேகத்தில் திமுக ஆட்சி.. மக்களின் கனவு கானல் நீராக போய்விட்டது.. அவினாசியில் கொந்தளித்த இபிஎஸ்!

செல்வந்தர்களின் உலகம்
உலகில் ஒரு பக்கம் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் எல்லாம் இருந்தாலும், மறுபுறம், பணம் படைத்த மனிதர்களின் வசதிக்காகவும், அவர்களை ஈர்ப்பதற்காகவும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, துபாயில் கடலுக்குள் ஒரு குட்டி தீவை கட்டப்பட்டுள்ள பாம் ஜுமேரா நகரம் தான் இப்போதைக்கு உலக பணக்காரர்களின் வசிப்பிடமாக உள்ளது. அதேபோல், துபாயில் செல்வந்தர்களின் பொழுதுபோக்குக்காக வான் நிலாவை போலவே ஒரு பிரம்மாண்ட ரெஸ்டாரண்ட் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு உலக செல்வந்தர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பைதான் சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.

ஆமை வடிவில் பிரம்மாண்ட நகரம்
அதாவது, சவுதி அரேபியாவில் உள்ள கடலின் மீது ஒரு பிரம்மாண்டமான மிதக்கும் நகரம் அமைக்கப்படவுள்ளது. இத்தாலியின் லசாரினி டிசைன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக இந்த நகரம் வடிவமைக்கப்படவுள்ளது. அதன்படி, அந்த நகரத்தின் மாதரியையும், அங்கு வரப்போகும் வசதிகள் குறித்தும் ஒரு ப்ளூபிரிண்ட்டை லசாரினி வெளியிட்டுள்ளது. இந்த நகரத்துக்கு 'பாங்கியோஸ்' என்ற பெயரை சவூதி சூட்டியுள்ளது. பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்ததாக கருதப்படும் துணைக் கண்டமான பாங்கியாவின பெயரை தழுவி இந்நகரத்துக்கு 'பாங்கியோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்?
கடலுக்கு மேலே அமையப்போகும் இந்த நகரத்தின் மொத்த நீளம் 1,800 அடி. அகலம் 2,000 அடி. நகரம் என சொல்லப்பட்டாலும் இது உண்மையிலேயே மிகப்பெரிய கப்பல் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் முழுக்க முழுக்க கப்பலின் தொழிநுட்பத்தில்தான் இந்நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆமை நகரத்தின் ஒவ்வொரு இறக்கை வடிவத்திலும் 19 பங்களாக்கள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும். மேலும், இந்த பாங்கியோஸ் நகரில் வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், விளையாட்டு மைதானம், பீச் கிளப், ரூஃப் டாப் கார்டன் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மொத்தம் 60 ஆயிரம் வரை இங்க தங்கலாம்.

எப்போது கட்டி முடிக்கப்படும்?
இந்த பாங்கியோஸ் நகரம் ஒரு கப்பலை போல உலகம் முழுவதும் பயணிக்கவுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் இந்த நகரம் செல்லும் எனக் கூறப்படுகிறது. இந்த நகரத்துக்கு தேவையான மின்சாரம் கடல் அலைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகருக்குள் அனைத்து பகுதிகளுக்கும் பயணிக்க கார் வசதி இருக்கிறது. இதுதவிர, சிறிய படகுகள், ஜெட் விமானங்களும் அங்கு கொண்டு வரப்படவுள்ளன. இந்த பிரம்மாண்ட நகரத்தின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதை முழுவதுமாக கட்டி முடிக்க 8 ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.