கஞ்சா சோதனை நடத்தப் போன போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. சேலம் ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத பணம்!
சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ரௌடி ஒருவர் வீட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கஞ்சா பதுக்கலை தடுக்க தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சேலம் மாநகர பகுதியிலும் கடந்த சில நாட்களாகவே கஞ்சா பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சபீர் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சபீர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, சபீர் வீட்டில் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தியபோது, ஒரு பெரிய பை முழுக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதனை தெடர்ந்து பணத்தை எண்ணிப் பார்த்ததில் சுமார் ரூபாய் 1 கோடி இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்தப் பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பின்போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ரூ.500, ரூ.1,000 செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்து, அதை பதுக்கி வைத்திருந்த சபீரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலாஜி, கோகுலநாதன் என்பவர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், 2016ல் மதிப்பிழப்பின்போது ரூ.1 கோடியை வங்கி மூலம் மாற்றுவதற்காக பாலாஜி, சபீரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தை மாற்ற முடியாமல் சபீர் தனது வீட்டிலேயே பையில் வைத்திருந்துள்ளார். இதையடுத்து பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்ட நிலையில், கோகுலநாதன் அந்த பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், அதனை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்லுமாறு சபீர் கூறியுள்ளார். இதையடுத்து, கோகுலநாதன் போலீசாரிடம், சபீர் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.
அப்படி, சபீர் வீட்டில் கஞ்சா தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையின்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இந்த பணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 1 கோடி அளவுக்கு சிக்கி இருப்பது சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications