குறையும் மேட்டூர் அணை நீர் மட்டம்.. பருவமழை எப்போது?.. ஆடியில் பொங்கி வருமா காவிரி
சேலம்: டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 13ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர் மட்டம் 93 அடியாக குறைந்துள்ளது. பருவமழை எப்போது என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தின் தலைக்காவிரியில் உற்பத்தியாகி பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. காவிரி நதிநீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், குடிநீருக்காக லட்சக்கணக்கான மக்களும் உள்ளன. தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதிநீரினால் பயன் பெறுகின்றனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியதால் கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் நீர் மட்டம் குறையாமல் இருந்தது. ஆடி முதல் நாளில் பொங்கி பிரவாகமெடுத்தது காவிரி.
கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகா மாநிலங்களில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனையடுத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆடி மாதத்தில் காவிரி பொங்கி பிரவாகம் எடுத்தது. நடப்பாண்டு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பருவமழை தொடங்கியதற்கான அறிகுறியே தென்படவில்லை. நடப்பாண்டு காவிரியில் தண்ணீர் வரத்து குறையத்தொடங்கி விட்டது.
சரியான நேரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது பாசன தேவை அதிகரித்ததால், நேற்று நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், பாசன தேவை மேலும் அதிகரித்துள்ளதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கன அடியில் இருந்து 126 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 94.10 அடியிலிருந்து 93.32 அடியாக குறைந்துள்ளதால் நீர் இருப்பு 56.52 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். தற்போது அணையில் உள்ள நீரை மட்டுமே நம்பி சாகுபடி செய்ய முடியாது என்கின்றனர் விவசாயிகள். பருவமழை பெய்தால் மட்டுமே குறுவை முடிந்து சம்பா சாகுபடி வரைக்கும் தாக்குபிடிக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 433 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு குடிநீருக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பருவமழை தாமதமாக பெய்தாலும் சரியான அளவு பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் வருணபகவானை வேண்டத்தொடங்கியுள்ளனர். ஆடி மாதம் பிறக்கும் முன்னே பருவமழை தீவிரமடைந்து அணைகள் நிரம்ப வேண்டும் காவிரித்தாய் பொங்கி வர வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் வேண்டத்தொடங்கியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடி பெருக்கு நாளில் பொதுமக்கள் ஒன்று கூடி விழா எடுப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டும் காவிரித்தாய் பெருவெள்ளமென பொங்கி வர வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications