தங்கத்தில் வளையல்.. சேலம் பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த 17 வயது காதலி! ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை
சேலம்: இன்ஸ்டாகிராம் காதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகின்றன.. அதற்கேற்றவாறு, நூதன மோசடிகளும் பெருகியபடியே உள்ளன.. திருமண மோசடிகளுக்கு நடுவில் காதல் மோசடிகளும், நகை மோசடிகளும் நடப்பதை கண்டு, பெற்றோர்கள் உறைந்துபோய் உள்ளனர்.. அந்தவகையில், காதலனை நம்பி சென்னையிலிருந்து ரயில் மூலம் சேலம் வந்த பள்ளி மாணவியிடம் நகையை பறித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். என்ன நடந்தது?
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு 17 வயதாகிறது.. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது இன்ஸ்டாகிராமுக்கு, ராகுல் என்ற பெயரில் friend request வந்துள்ளது. அந்த நட்பை ஏற்றார் மாணவி..

அப்போது அந்த நபர், தன்னுடைய சொந்த ஊர் ஈரோடு என்றும், கல்லூரியில் படித்து வருவதாகவும் சொன்னார்.. நாளடைவில் இருவரும் செல்போன் நம்பரை மாற்றி கொண்டு பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் இருவரும் காதலில் விழுந்தனர்.
இந்நிலையில், மாணவியை நேரில் சந்திக்க ராகுல் விரும்பினார்.. இதற்கு சம்மதம் சொன்ன மாணவி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டார்.
தங்க வளையல், செயின்
அப்போது மாணவிக்கு போனை போட்ட ராகுல், தான் சேலத்தில் இருப்பதாகவும், அங்கேயே ரயிலிலிருந்து இறங்கி விட்டால், பஸ்சில் ஈரோட்டிற்கு போகலாம் என்றும் சொல்லி உள்ளார்.. உடனே மாணவியும், அன்றைய தினம் இரவு 9 மணியளவில் சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.
அங்கு காத்திருந்த காதலனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியடைந்தார்.. பிறகு ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று மாணவி சொல்லி உள்ளார்.. உடனே ராகுல், இவ்வளவு நகைகளுடன் சென்றால் ஆபத்து.. பின்னாடியே யாராவது வந்து, நகைகளை பறித்து சென்று விடுவார்கள்.. அதனால் எல்லா நகைகளையும் தன்னிடம் கழட்டி தந்துவிட்டு போ என்று சொல்லி உள்ளார்..
உடனே மாணவியும், தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க வளையல்கள், 1 சவரன் செயின் மற்றும் லேப்டாப் என சுமார் ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை ராகுலிடம் தந்துவிட்டு, கழிப்பறை நோக்கி நகர்ந்தார்.
பதற்றமான மாணவி
சிறிது நேரம் கழித்து கழிவறையிலிருந்து மாணவி திரும்பி வந்து பார்த்தபோது ராகுல் அங்கு இல்லை.. இதனால் பதற்றமான மாணவி, உடனே ராகுலின் செல்போனுக்கு போன் செய்தார்.. ஆனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது... இரவு நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் தேடினார்.. எங்கியுமே ராகுல் இல்லை..
இறுதியில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இதுகுறித்து தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தந்தார்.. அவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து, விரைந்து வந்து, சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றி நகை பறித்து சென்றவரை தேடி வருகின்றனர்.
சித்திரிகா 15 வயது
இதேபோல சில நாட்களுக்கு முன்புகூட, இதே சேலம் மேட்டூரில் ஒரு மோசடி நடந்தது.. கூலித்தொழிலாளி பாரதி என்பவரின் மகள் சித்திரிகாவுக்கு 15 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த நிசாந்த் பிலிப் என்ற 19 வயது நபரை காதலித்து வந்துள்ளார்..
ஒருநாள் திடீரென வீட்டில் பீரோவில் இருந்த, 30 பவுன் நகைகளை காணவில்லை என்று பாரதி பதறிப்போய்விட்டார்.. இதுகுறித்து மகள் சித்திரிகாவிடம் கேட்டுள்ளார்.
பிசினஸ் பணம்
அதற்கு சித்திரிகா, 'நிசாந்த் பிலிப் என்னை காதலிப்பதாக சொன்னார்.. திருமணம் செய்ய, சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கூறி, 30 பவுன் நகைகளை வாங்கி சென்றார் என்றார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன பாரதி, கருமலைக்கூடல் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. 15 வயது சிறுமியிடம் காதல், திருமணம், பிசினஸ் செய்ய 30 பவுன் நகை என்று பேசி மோசடி செய்த நிசாந்த் பிலிப்பை இறுதியில் கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications