"அந்தரங்கம்".. கிறங்கிய அப்பாவிகள்.. ஆண்ட்டியை விடுங்க.. தாய்மாமன்தான் ஹைலைட்.. விக்கித்த வாழப்பாடி
5 திருமணம் செய்த சரண்யா என்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்
சேலம்: முதல் சந்திப்பிலேயே, தன் பேச்சால், யாராக இருந்தாலும் கிறங்கி விழ வைத்துவிடுவாராம் சரண்யா.. இப்போது இவர் கைதாகி ஜெயிலில் இருக்கிறார்.. என்ன காரணம்?
சேலத்தை சேர்ந்தவர் தீபன்.. இவருக்கு சரண்யா என்ற பெண் ஃபேஸ்புக்கில் அறிமுகமானார்.. சரண்யாவும் சேலம் மாவட்டம்தான்.. கிச்சிப்பாளையத்தில் வசித்து வருகிறார்.
ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த நட்பு, வாட்ஸ்அப் நம்பர்களை பகிர்ந்து கொண்டு, அதன்மூலம் நெருக்கமாகும் அளவுக்கு சென்றுவிட்டது..

நெருக்கம் + இணக்கம்
ஒரு கட்டத்தில், இப்படியே பழகி தன்னை தீபன் கைவிட்டுவிடுவாரோ என்று நினைத்தார் சரண்யா.. அதனால் தீபனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.. ஒன்றிரண்டு வருடம் கழித்து திருமணம் செய்ய தீபன் முடிவெடுத்திருந்தாலும், சரண்யாவின் அழகு, பேச்சு, அன்பு, போன்றவைகளை இழக்க முடியாமல் திணறினார். வேறு வழியின்றி, அவரை விட்டு பிரிய முடியாததால், தன் குடும்பத்தில் சரண்யாவை பற்றி சொல்லி உள்ளார்.. அவர்களும் தீபனின் காதலை ஏற்று, திருமணம் செய்ய சம்மதம் தந்தனர்.. சரண்யாவின் தாய்மாமன் ரகுவரன் என்பவர், இந்த திருமணத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளார்..

வாழப்பாடி
கடந்த மே மாதம் 26ம் தேதி வாழப்பாடி அருகே உள்ள பேளூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. 4 மாத காலமாக தீபன் வீட்டில் வசித்து வந்த சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.. அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்தார்.. கடைகள், கோயில்களுக்கு சென்று வந்திருக்கலாம் என்று தீபன் நினைத்தார்.. ஆனால், வீட்டுக்கு வராமல் சில நாட்கள் வெளியிலேயே தங்கி இருக்க ஆரம்பித்தார்.. இதனால் குடும்பமே அதிர்ந்தது.. தீபனின் பெற்றோர்கள் இதை சரண்யாவிடம் பற்றி கேட்டபோது, தாய்மாமன் ரகுவரன் வீட்டிற்கு சென்றுவருவதாக சொல்லி உள்ளார்..

மாமா, தாய்மாமா
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபன் வீட்டிலிருந்த சரண்யா திடீரென மாயமானார்... செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. வீட்டில் இருந்து 30 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்க பணத்தையும் காணவில்லை.. வெளியே சென்ற சரண்யாவும் நாள் கணக்கில் வீடு திரும்பவில்லை... எங்கே தேடியும் சரண்யா கிடைக்காததால், தீபன் இது குறித்து ஆத்தூர் நகர போலீஸில் புகார் கொடுத்துள்ளார்... போலீசாரும் வழக்கு பதிவு செய்து சரண்யாவை தேடி வந்தனர்.

இடியோ இடி
அவரது செல்போனை டிரேஸ் செய்போதுதான், சேலத்தில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சரண்யாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் சரண்யாவையும் ஸ்டேஷனக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.. அப்போதுதான் அந்த முதல் ஷாக் தீபன் தலையில் விழுந்தது.. சரண்யாவிற்கு ஏற்கனவே சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவருடன் திருமணம் நடந்துவிட்டதாம்.. 3 மகன்களும் இருக்கிறார்களாம்.. அந்த மகன்களை குறித்து போலீசார் விசாரித்தபோது, 2வது இடி தீபன் தலையில் விழுந்தது.. அந்த 3 மகன்களில் மூத்த மகனுக்கு கல்யாணம் நடந்து, பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்களாம்..

1,2,3,4
அதற்கு பிறகு தொடர் விசாரணையில் 3வது இடி, தீபன் தலையில் தொப்பென்று விழுந்தது.. பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தனியாக வசித்து வரும்போது, சரண்யாவுக்கு நாமக்கல்லை சேர்ந்த இன்னொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது.. அவரையும் விட்டு பிரிந்து 4வதாக, கோவையைச் சேர்ந்த ஒருவருடனும் திருமணம் நடைபெற்றுள்ளது.. 5வதாக வாக்கப்பட்டதுதான் தான் என்பதை அறிந்து நிலைகுலைந்து போனார் தீபன். இதைவிட இன்னொரு ஸ்பெஷல் ஹைலைட் உள்ளது.. அந்த தாய்மாமன் இருக்கிறாரே, அவர்தான் சரண்யாவின் 2வது கணவர்.. அடுத்தடுத்த திருமணங்களை செய்து, பணம், நகைகளை சரண்யா கொள்ளையடித்தபோது, உடனிருந்தவர் இந்த தாய்மாமன் ரகுவரன்தான்..

2 + 2 புருஷன்
சரண்யா + ரகுவரன் 2 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளார்கள்.. இப்போதைக்கு சரண்யாவிடம் இருந்து 12 பவுன் சரவன் மட்டும் மீட்கப்பட்டுள்ளது என்றாலும், வேறு யாரையெல்லாம் சண்யா ஏமாற்றினார் என்று போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. சரண்யாவிடம் விசாரணை நடத்தும்போது, போலீசாருக்கும் அதிர்ச்சிதான்.. 34 வயதுதான் ஆகிறது சரண்யாவுக்கு.. அருஞ்ஜோதி என்பது இவரது ஒரிஜினல் பெயர்.. ஆனால், சரண்யா, கவுசல்யா என்று பல பெயர்கள் சொல்லி ஏமாற்றி உள்ளார்.. இதில், முதல் கணவரை விட்டு தனித்து வாழ்ந்தபோது, பாலியல் தொழில் கும்பலுடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது..

பியூட்டி பாட்டி
அதில் சில இளைஞர்களுடன் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.. போலீசார் சரண்யாவை தேடிவந்தபோது, ரகுவரன் வீட்டில்தான் சரண்யா இருந்துள்ளார்.. 20, 25 வயதில் எடுக்கப்பட்ட தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்வாராம்.. திருமணத்துக்காக ஏங்கும் ஆண்களை குறி வைத்து, தன் வலையில் வீழ்த்தி உள்ளார்.. பியூட்டி என்று நினைத்து கல்யாணம் செய்தால், போயும் போயும் ஒரு "பாட்டி"யிடம் ஏமாந்து தொலைத்துவிட்டோமே என்று தீபன் நொந்து போய் கிடக்கிறார்.

மாப்பிள்ளை
அதுமட்டுமல்ல, திருமணம் செய்ய, பெண் கிடைக்காமல் நீண்ட காலமாகவே தேடி வரும் நபர்களைதான் சரண்யா தேர்வு செய்வாராம்.. அதுபோன்றவர்களிடம் நெருங்கி பழகி, திருமணத்துக்கு சம்மதம் பெற்றதுமே, தன்னிடம் நகைகள் இல்லை என்று சொல்லி, மணமகன் தரப்பையே தனக்கு நகைகளை போட செய்வாராம்.. இதுபோன்று கடந்த 4 வருடங்களாகவே மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.. அதேபோல, 100 சவரனுக்கும் மேல் இவர்கள் நகைகளை பறித்திருக்கலாம் என்கிறார்கள்.. கடந்த வாரம்தான், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சந்தியா என்பவர் கைதானார்.. தற்போது சேலத்தில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சரண்யா கைதாகி உள்ளார்.. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும், இதுபோன்ற திருமண மோசடிகள் நடந்து வருவது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications