சேலத்தில் துணிகரம்.. துணி கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு.. கோர்ட்டில் சரணடைந்த 2 இளைஞர்கள்
ஜவுளி கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்
சேலம்: துணிக்கடைக்காரரை கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
பெரியசோரகையை சேர்ந்த வேலு தங்கமணி என்பவர், நங்கவள்ளியில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி இவரது கடைக்கு 2 இளைஞர்கள் துணி வாங்குவது போல் வந்தனர்.

வேலு தங்கமணியிடம் பேச்சு கொடுத்தவாறே டி-ஷர்ட் வாங்கினர். அதற்கு வேலு தங்கமணி பணம் கேட்கவும், திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி தப்பி ஓடினர்.
சேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல் #salem #சேலம் pic.twitter.com/ZlAJYnd7Oa
— Oneindia Tamil (@thatsTamil) July 21, 2019
ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலு தங்கமணியை ஜவுளி கடை ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பந்தமாக போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இந்த கொலை முயற்சி வீடியோவை வெளியிடவும், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேலு தங்மணியை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பதை கண்டறிந்த போலீசார் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். இதையடுத்து, இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications