வயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்
இளம் பெண் மரணம் குறித்து ஆத்தூர் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம்: "உடம்பெல்லாம் காயம் இருக்கு.. என் மகள் சாவில் மர்மம் இருக்கு" என்று தற்கொலை செய்து கொண்ட கவுசிகாவின் பெற்றோர் கதறுகின்றனர்.. வயக்காட்டில் கவுசிகா சடலமாக இறந்துகிடந்த பகுதியில் பைக்கில் ஒருவர் வந்துள்ளார்.. வீடியோ காலில் ஒருவர் பேசியுள்ளார்.. இவர் யார் என்று போலீசார் மும்முரமாக தேடி வருகிறார்கள்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராண்டி வலசு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் குப்புசாமி.. இவர் ஒரு லாரி டிரைவர்.. இவர்ருடைய மனைவி சசிரேகா. இவர்களுக்கு 23 வயது மகள் கவுசிகா.
3 வருஷங்களுக்கு முன்பு கவுசிகாவுக்கும், சின்ன சேலத்தை சேர்ந்த சரவணனுக்கும் கடந்த கல்யாணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம்.. திருப்பூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். ஒரு வயதில் பூசிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். சரவணன் அலுமினிய கதவுகள் செய்யும் தொழில் செய்து வந்தார். கவுசிகாவும் அதே பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.

கல்யாணம்
கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆனாலும் தம்பதிக்குள் நிறைய சண்டை வந்துள்ளது.. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதை தங்கள் வீட்டிலும் கவுசிகா சொல்லி வந்துள்ளார். சமீபத்திலும் அப்படி தகராறு வந்துவிடவும், கவுசிகா அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.

வயல்வெளி
2 நாளைக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போன கவுசிகா திரும்பி வரவே இல்லை.. அதனால் பதறி போன பெற்றோர், கவுசிகாவை தேடி சென்றனர்.. அப்போது ஒரு வயக்காட்டில் கவுசிகா மயங்கி விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து அலறிய குடும்பத்தினர், வாழப்பாடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

மர்மம்
இதனால் அதிர்ச்சி அடைந்த இது சம்பந்தமாக மல்லியக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தங்கள் பெண்ணின் சாவில் மர்மம் உள்ளது.. யாரோ அடித்து கொன்றிருக்கிறார்கள்.. முகம், கால்களில் காயங்கள் உள்ளன.. நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

போஸ்ட் மார்ட்டம்
இதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வயக்காட்டில் சடலமாக கிடந்த கவுசிகாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. அவரது உடம்பில் எந்தவித விஷமும் இருப்பதற்கான அறிகுறி இல்லை.. அதேபோல தற்கொலைக்கான அடையாளமும் தெரியவில்லை என்று ரிப்போர்ட் வந்தது. அதனால், சிறப்பு உடற்கூறு ஆய்வுக்காக கவுசிகா உடல் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், கவுசிகா எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

வீடியோ கால்
இன்னொரு பக்கம், போலீசாரின் விசாரணை முடக்கப்பட்டுள்ளது.. தற்கொலை செய்து கொண்ட இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் பார்வையிடப்பட்டு வருகின்றன.. கவுசிகாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. அதில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது.. இது தவிர, இறப்பதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான், பைக்கில் ஒருவர் அந்த பகுதியில் வந்துள்ளார்.

மர்ம நபர்
பைக்கை சிறிது தூரம் தள்ளி கொண்டே சென்றவர், பிறகு ஸ்டார்ட் செய்து விட்டு கிளம்பி செல்கிறார்.. அவர் யார் என்று தெரியவில்லை.. வீடியோ காலில் பேசியவரும் யார் என்று தெரியவில்லை.. அந்த நபரை தேடும் பணியும் மும்முரமாகி உள்ளது.. எனவே கவுசிகா மரணம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications