சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது
சேலம்: சேலத்தில் லாட்ஜில் அறை எடுத்து விபசாரம் செய்து வந்த இரண்டு அழகிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக வெளிமாநில அழகிகள் அறை எடுத்து தங்கி விபசாரம் செய்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கருக்கு புகார்கள் வந்தன.
இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை
சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள அந்த தனியார் தங்கும் விடுதியில் திடீர் என சோதனை செய்தனர்.

திருப்பூர்
அப்போது அங்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த லட்சுமி, தும்கூர் பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் இருந்தனர். இவர்களையும் இவர்கள் இருவரையும் வைத்து விபசாரம் நடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த அபுல்ஹசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆணையர்
பின்னர் மூவரையும் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து கைது செய்தனர். இவர்களைப் போல் வேறு தங்கும் விடுதிகளில் விபசாரம் நடக்கிறதா ? என கண்காணித்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தலைதூக்கும் விபசாரம்
சேலம் மாநகராட்சி பகுதியில் சில வருடங்களாக விபசாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சில தனியார் தங்கும் விடுதிகளில் விபசாரம் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது.

கண்காணிப்பு
இவர்களை கண்காணித்து விபசாரம் இல்லாமல் செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விட்டுள்ளனர். மேலும் இவர்களை இயக்க யாரேனும் இருக்கிறார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications