ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு
போட்டியிடும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பாரபட்சமற்ற முறையில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும்
Recommended Video

சேலம்: சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சாந்தி மற்றும் மகள் ரம்யா மற்றும் மகன் தீனாவுடன் வசித்து வருகிறார்.

தூக்கில் தொங்கிய நிலை
இந்நிலையில் நேற்று இரவு மகன் தீனாவை மட்டும் அவரது பாட்டி வீட்டில் சென்று தூங்குமாறு ராஜ்குமார் அனுப்பியுள்ளார். இதையடுத்து இன்று காலை தீனா மீண்டும் வீட்டுக்கு சென்றபோது பெற்றோர்கள் மற்றும் சகோதரி அனைவரும் வீட்டில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காவல் நிலையம்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தீனா கூறியதையடுத்து அனைவரும் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சடலங்கள் மீட்பு
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications