Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 சவரன் நகை.. பாரதியின் வீடு முழுக்க காலி நகைப் பெட்டிகள்.. சேலம் போலீசுக்கு உதயசரண் தந்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் நாளுக்கு நாள் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.. 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல், 45 வயது திருமணமான நபரை காதலித்து, அவரையே திருமணமும் செய்ய முயன்றபோதுதான், இப்படியொரு கொலை அரங்கேறியுள்ளது.. சேலத்தில் என்னதான் நடந்தது? போலீசார் விசாரணையில் வெளிவந்த தகவல்கள் என்ன? உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சொல்வதென்ன? சுருக்கமாக பார்ப்போம்.

சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் 38 வயது பாரதி.. பி.டெக் இன்ஜினியர். இவரது அப்பா அதிமுக பிரமுகரான டெல்லி ஆறுமுகம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நன்கு அறிமுகமாகி நேரடி தொடர்பில் இருந்தவர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்துவிட்டார்.

50 Sovereign Gold Jewelry Salem Bharathi 50

பாரதி, சேலம் சங்கர் நகரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இதற்காக ரூ.25 ஆயிரம் மாத வாடகைக்கு வீடு ஒன்றை தனியாக எடுத்திருந்தார்.. இங்கேயே இரவிலும் தங்கி கொள்வார்..

கள்ளத்தொடர்பு

இவர் சேலம் மல்லூர் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த 45 வயது உதயசரண் என்பவருடன் பழகி வந்தார்.. சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிஓஓவாக பணியாற்றி வந்த உதயசரண் ஏற்கனவே திருமணமானவர்.. 2 பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து, பாரதியுடன் பழகி வந்துள்ளார்..

ஒருகட்டத்தில் உதயசரணின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்து கணவரை கண்டித்திருக்கிறார்.. எப்படியாவது பாரதியின் தொடர்பை துண்டித்து கொள்வதாக மனைவியை சமாதானம் செய்துள்ளார்.

பிறகு தனக்கு திருமணமான விஷயத்தை உதயசரண், பாரதியிடம் சொல்லவும், இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பாரதி. மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு உதயசரண் சம்மதிக்கவில்லை. இது தொடர்பான பிரச்சனை பாரதி-உதயசரண் இடையே நடந்து வந்துள்ளது..

பிரேஸ்லெட் தங்கத்தில்

சம்பவத்தன்றும், இதுதொடர்பான பேச்சு எழவும், இருவருமே தகராறு செய்து கொண்டனர்.. கைகலப்பு நடந்துள்ளது.. அப்போதுதான் பாரதியை அடித்தும், தலையணையை வைத்து அமுக்கியும் உதயசரண் கொன்றது தெரியவந்தது.. ஆனால் போலீசாரிடம் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டிருந்ததாக தெரியவரவும்தான், உதயசரண் வசமாக மாட்டிக் கொண்டார்.

பாரதிக்கு உதயசரணை ரொம்பவே பிடிக்குமாம்.. 10 சவரனில் பிரேஸ்லெட் வாங்கி உதயசரணுக்கு கிஃப்ட் தந்துள்ளார்.. ஆனால் அந்த பிரெஸ்லெட்டை, உதயசரண் கடந்த 3 மாதங்களுக்கு விற்றுவிட்டதாக தெரிகிறது.. இப்போது மேலும் சில நகைகள் உயிரிழந்த பாரதியின் அறையில் இல்லை என்கிறார்கள் அவரது உறவினர்கள். நகைக்காகவே பாரதியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகவும் போலீசாரிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

காலி நகைப் பெட்டிகள்

அதாவது 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. இதனால் பாரதி தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.. அப்போது நகை வைப்பதற்கான 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் திறந்து காலியாகவே கிடந்ததாம்..

அவர் சிகரெட் பிடிக்கும் ரூமிலும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.. இதனால் போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு, விசாரணையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.. இதில்தான் பாரதி போலீசாரிடம் சிக்கினார்.

2 மோதிரங்கள்

இதுகுறித்து காவல்துறை தரப்பில் சொல்லும்போது, "2 மோதிரத்தை அடகு வைத்து ரூ.2 லட்சத்தை பாரதியிடம் கொடுத்ததாக உதயசரண் எங்களிடம் சொன்னார்.. ஆனால், நகை பெட்டியை வைத்து விசாரித்ததில் எதுவுமே தெரியாது என்கிறார்..

அதேபோல பாரதியின் 2 செல்போன் எங்கே? என கேட்டதற்கு தெரியாது என்றார் உதயசரண். ஆனால், ஒரு செல்போனை சாக்கடையில் வீசியிருக்கிறார்.. சாக்கடையில் வீசப்பட்ட அந்த செல்போனை மீட்டுள்ளோம். இன்னொரு செல்போன் எங்கே இருக்கிறது என அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தலைகாணி - ரத்தம்

பெங்களூரில் வேலை பார்த்தபோது பாரதிக்கு சிகரெட், மது பழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது.. உதயசரண், பாரதி இருவருமே சிவன் பக்தர்கள்.. உதயசரணின் பெயரை பாரதி தன்னுடைய கையில் உதயா என பச்சை குத்தி கொண்டுள்ளார்..

சம்பவத்தன்று, இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஆத்திரத்தில் உதயசரண் பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டிருக்கிறார் பாரதி.. தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உன் வீட்டுக்கே வருவேன் என்று சொல்லவும்தான், இவர்களுக்குள் கைகலப்பு ஆரம்பமாகி உள்ளது..

50 பவுன் நகைகள்

அப்போது பாரதி, உதயசரணின் கையை கடித்துள்ளார்., உடனே அடித்து கீழே தள்ளிய உதயசரண், தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.. ரத்தம் படிந்த தலையணையை மீட்டிருக்கிறோம்.. இதில் சிக்கி விடுவோம் என்று பயந்து பாரதியின் செல்போனை சாக்கடையில் விசியிருக்கிறார்.. நகைக்கான ஆதாரங்களையும் தருமாறு உதயசரணிடம் கேட்டிருக்கிறோம்" என்றனர்.

இதனிடையே பாரதியின் அம்மா, தன்னுடைய மகளின் 50 பவுன் நகையை உதயசரண் திருடி விட்டதாக கூறவும், அது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுக பிரமுகர் கொலையில் தினம் தினம் புது புது தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+