சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயந்திக்கு நிறைய பணம் சம்பாதிக்கணுமாம்.. அதுக்கு இப்படியாம்மா பண்ணுவீங்க!

ஆத்தூர் தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jayanthi : பத்திர எழுத்தரான சேலம் ஜெயந்தி செய்த வேலை- வீடியோ

    சேலம்: "சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு ஆசை.. அதனாலதான் ஆள் கடத்தல் வேலையில் ஈடுபட்டோம்" என்று பத்திர எழுத்தரான ஜெயந்தி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயசு 44. ஆத்தூரில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றிலும் அவர் பங்குதாரராக உள்ளார்.

    போன மாசம் 18-ம் தேதி மகனை ஸ்கூலில் இருந்து கூப்பிட்டு வர சுரேஷ் சென்றார். ஆனால் மர்மநபர்கள் சிலர் வழிமறித்து, கடத்தி கொண்டும் போய்விட்டனர்.

    சிசிடிவி காமிரா

    சிசிடிவி காமிரா

    ஆனால் அடுத்தநாளே உள்ள அல்லிக்குட்டை பகுதியில், கடத்தியவர்கள் சுரேஷை இறக்கிவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது சம்பந்தமாக சுரேஷ் பள்ளப்பட்டி ஸ்டேஷனில் புகார் தந்தார். அப்போது போலீசார் முதல்வேலையாக, சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

    ஜெயந்தி

    ஜெயந்தி

    சுரேஷ் சொன்ன காரின் அடையாளத்தை வைத்து அதன் நம்பரையும், உரிமையாளரையும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களையும் ரவுண்டு கட்டிவிட்டனர். கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மொத்தம் 4 பேர் என்பதும் இந்த குரூப்புக்கு தலைவி ஜெயந்தி என்பதும் தெரியவந்தது.

    ஜெயந்தி

    ஜெயந்தி

    ஜெயந்தி ஒரு பத்திர எழுத்தர். போலீசாரிடம் இவர் அளித்த வாக்குமூலத்தில், "கணவனிடம் விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக வசித்து வருகிறேன். பத்திரம் எழுதும் நபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பத்திரம் எழுதி தருமாறு கேட்டார்.

    4 பேருக்கு வலைவீச்சு

    4 பேருக்கு வலைவீச்சு

    அதன்மூலம்தான் நிறைய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் எனக்கு பழக்கம் ஆனார்கள். நிறைய பணம் சம்பாதிக்கணும்னு என்று எனக்கு ஆசை. இதை ஹரிபிரசாத் என்பவரிடம் சொன்னேன். அப்போதுதான் சுரேஷை கடத்தினால் நிறைய பணம் கிடைக்கும் என்று பிளான் செய்தோம்" என்றார். தற்போது ஜெயந்தியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    English summary
    Police have arrested 3 people including a Lady Jayanthi in Aathur Businessman kidnap case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X