'சொத்து வரி, குடிநீர் வரி கட்டவில்லையாம்'.. அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த அதிகாரிகள்
சேலம்: சேலத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யபட்டது. இதற்கு பின்னால் திமுகவினரின் சதி உள்ளதாக அதிமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வேட்புமனு பரிசீலனை
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு
சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் நடேசனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத காரணத்தினால் நடேசனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக
''நடேசன் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை'' அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறிய திமுகவினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வரிபாக்கிக்கான கணிணி சான்றை கொடுத்தனர்.

திமுக மீது குற்றச்சாட்டு
இதனால் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடேசன் கூறுகையில், 'அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் திமுகவினர் குறுக்குவழியில் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகாரிகளை பயன்படுத்தி தனது வேட்புமனுவை நிராகரிக்க வைத்துள்ளனர்' என்று கூறினார்.

சொத்து வரி, குடிநீர் வரி எவ்வளவு நிலுவை?
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டுள்ளதாகவும் பிற்பகல் ஒரு மணி வரை அவகாசம் கொடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடேசனின் மனைவி பெயரில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் சொத்து வரி மற்றும் 21 ஆயிரத்து 444 ரூபாய் குடிநீர் வரி நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications