Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எய்ட்ஸ்".. ஒரே பெண்ணை, ஒரே நாளில் பல "விஐபிகளுக்கு" சப்ளை செய்த திவ்யா.. ச்சீ.. இவரும் ஒரு பெண்ணா?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் திவ்யாவை பார்த்து மொத்த பேரும் அதிர்ந்து போயுள்ளனர்.. பொதுவாக, பெண்கள் போக்சோவில் கைதாவதே கேவலமானது.. அதிலும் குண்டர் சட்டத்தில் கைதாவது அதைவிட அவமானகரமானது. அப்படித்தான் இந்த திவ்யாவும் குண்டர் சட்டத்தில் பாய்ந்துள்ளார். இந்த உலகில், 'பெண்ணுக்கு எதிரி பெண்ணே' என்பதற்கு இந்த திவ்யாவும் ஒரு உதாரணம்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் பாலியல் விபச்சாரங்களில் இளம்பெண்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.. ஐடி நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்களை இப்படி குறிவைத்து சில கும்பல்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

AIIDS: Salem woman Divya gave counseling to AIIDS sufferers and what did Salem police say

வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடிவரும் பெண்களை, நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக சொல்கிறார்கள்..
அதிரடிகள்: இளம்பெண்களின் குடும்ப சூழல், வறுமை, பணத்தேவை போன்றவைகளை அறிந்து கொண்டு, விபச்சார கும்பல்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதையடுத்துதான், மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியில் குதித்துள்ளனர்.. எங்கெல்லாம் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல்கள் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சென்று, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாகவே விபச்சாரம் அதிக அளவில் கொடி கட்டி பறப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரபரப்பு புகார்கள் சென்றன.. இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையை துவக்கினர்..

அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல்கள் வந்தன.. அதன்படி, அங்கிருந்த வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.. இதில், பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் மட்டுமே, மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்... அங்கிருந்த பெண்கள் 20 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

2 பேர் கைது: இதில் முக்கிய நபர்கள் 2 பேர் சிக்கி உள்ளார்களாம்.. சேலம் மாவட்டம் பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரும், சேலம் ஜாகீர் அம்மாபாளைம் பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும்தான் இதற்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். திவ்யாவுக்கு 36 வயதாகிறது.. ஜாகீர் அம்மாபாளையம், காசக்காரனூர் பகுதிகளில் இந்த விபச்சாரத்தை நடத்துவதற்காகவே, வீட்டை வாடகைக்கு பிடித்திருக்கிறாராம்.

இப்படித்தான், கடந்த 20-ந் தேதி திருவாக்கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்த பெண்களிடம், தியாகராஜன் வலிய சென்று பேசியிருக்கிறார்.. நெடுஞ்சாலை நகரில், ஒரு பங்களாவில் பெண்கள் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் ஜாலியாக இருக்கலாம் என்றும் தியாகராஜன் அவர்களை அழைத்து உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், புகார் தந்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், போலீசார் ரகசியமாக கண்காணிப்பு நடத்தியதில், தியாகராஜனும், திவ்யாவும் சிக்கி உள்ளனர்.

விஐபிகள்: எந்த பெண்களை பார்த்தாலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்திவிட நினைப்பாராம் திவ்யா.. அப்பாவி பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதில், தியாகராஜனுக்கும் நிறைய பங்கு உள்ளது. இப்போது, இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.

சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. இதற்கு பிறகு போலீசார் தொடர் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், திவ்யா பற்றின பல ரகசியங்கள் வெளியாகின.

ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா.. சுகாதாரத்துறையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து வந்துள்ளார்.. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த திவ்யா, ஓமலூருக்கு இடமாறுதலாகி சென்றிருக்கிறார்.. அப்போது, அப்பாவி பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு, அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு, கவுன்சிலிங்கிற்காக ஓமலூர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கவுன்சிலிங் தந்து ஆலோசனைகளை வழங்கி வந்ததே இந்த திவ்யாதானாம்.

கவுன்சிலிங்: அதுமட்டுமல்ல, எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு, பொதுவாகவே, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.. அதனால், அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை, அவர்களின் ரத்தத்தை டெஸ்ட் செய்து கொடுக்கும் பணியிலும் திவ்யா ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதைத்தவிர, கர்ப்பிணி பெண்களுக்கும், "எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்" என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

அப்படி கவுன்சிலிங்குக்கு வந்த ஏராளமான பெண்களின்அறிமுகம் திவ்யாவுக்கு கிடைத்திருக்கிறது.. அவர்களிடம் இனிக்க இனிக்க பேசி, தன் வலையில் விழ வைத்துள்ளார் திவ்யா.. அதாவது, அந்த பெண்களின் பலவீனங்களை எல்லாம், தன் பலமாக்கி வந்துள்ளார்.

கவுன்சிலிங்: அதுமட்டுமல்ல, எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு, பொதுவாகவே, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.. அதனால், அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை, அவர்களின் ரத்தத்தை டெஸ்ட் செய்து கொடுக்கும் பணியிலும் திவ்யா ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதைத்தவிர, கர்ப்பிணி பெண்களுக்கும், "எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்" என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

இப்படி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என பாலியல் தொழில் தொடர்பான கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு திவ்யா அனுப்பி வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.. வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்களைக்கூட திவ்யா விட்டுவைக்கவில்லை.

போட்டோக்களை தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள், என பிரபலங்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி தங்களது பாலியல் வலையை, விரிவாகவே விரிவுபடுத்தியிருக்கிறார் திவ்யா.. இப்போது லட்சங்களை அள்ளியதும், கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கையில் திளைத்ததும் அந்த பெண்கள் இல்லை, திவ்யாதான்..

கணவர் உடந்தை: இப்படி சம்பாதித்த பணத்தில், கண்ட கண்ட இடங்களில் சொத்துக்களை வாங்கி வாங்கி போட்டுள்ளாராம் இந்த திவ்யா.. இத்தனைக்கும் திவ்யா திருமணமானவர்.. இவரது கணவர், ஒரு மாநகராட்சி ஊழியராம்.. அவருக்கும் இதில் ஏகப்பட்ட பங்கு உள்ளதாக தெரிகிறது.

ஒரே பெண்ணை, ஒரே நாளில் பலருக்கு அனுப்பிவைத்து, பல லட்சங்களை அள்ளிவிடுவாராம் திவ்யா. ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு, ஒரு சிறு தொகையை மட்டுமே தந்து வந்திருக்கிறார். திவ்யா பேச பேச, அவர் சொல்றதையெல்லாம் கேட்டு போலீசாரே விக்கித்து போய்விட்டனர். இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை.. குண்டர் சட்டம் இப்போதுதான் பாய்ந்துள்ள நிலையில், இனி அடுத்தடுத்த விசாரணைகள் நடக்கும் என்று தெரிகிறது.

திவ்யா: திவ்யாவுக்கு உறுதுணையாக இருந்து வரும் அந்த பிரபலங்கள், விஐபிகள் யாரென்று விரைவில் தெரியவரும்.. இந்த விஷயத்தில், மொத்த உண்மையையும், நம்முடைய போலீசார் வெளிக்கொணர்வார்கள் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக, திவ்யா போன்றோருக்கு, நாகர்கோவில் காசிக்கு கிடைத்ததுபோல, உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் கிளம்பி உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+