சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரி கனவிலும் நினைக்காத சம்பவம்.. துணை நடிகர் ரூபத்தில் ட்விஸ்ட்
சேலம்: சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மகன் பாலாஜி சின்னத்திரையில் துணை நடிகராக பணியாற்றி வந்தார். கோபிநாத்தின் முதல் மனைவி லலிதா மற்றும் மகள் வசந்தி ஆகியோர் 1978ம் ஆண்டே இறந்துவிட்டனர். தனது பெரியம்மா மற்றும் அக்காளுக்கு இறப்பு சான்றிதழ்கள் வாங்க துணை நடிகர் பாலாஜி விஏஓவை அணுகி உள்ளார். அவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இருந்தால் தான் சொத்துக்களை ஒருவர் இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும். இதனால் அந்த காலத்தில் இறந்தவர்களுக்கும் இப்போது சான்றிதழ் வாங்க அணுகிறார்கள். அப்படி சான்றிதழ் வழங்க சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வருகிறது. அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து அரசு அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள். மக்கள் துணிந்து ஒவ்வொரு லஞ்சத்திற்கு எதிராகவும் புகார் அளிக்க தொடங்குவதால் தற்போது கைது நடவடிக்கை அதிகமாகி வருகிறது. அந்த வகையில் சேலத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் கோபிநாத் என்பவருடைய மகன் பாலாஜிக்கு 45 வயது ஆகிறது. இவர் சின்னத்திரையில் துணை நடிகராக பணியாற்றி வருகிறார். கோபிநாத்தின் முதல் மனைவி லலிதா மற்றும் மகள் வசந்தி ஆகியோர் 1978-ம் ஆண்டு இறந்து விட்டார்கள். இந்த நிலையில் பாலாஜி தனது பெரியம்மா மற்றும் அக்காளுக்கு இறப்பு சான்றிதழ்கள் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனு மீது சேலம் பெரியேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரணை நடந்தது . இதையடுத்து பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலரான பெரமனூரை சேர்ந்த 45 வயதாகும் ராஜசேகர் என்பவரை சந்தித்து மனுவின் நிலை குறித்து கேட்டாராம். அப்போது அவர் இந்த மனுக்களை பரிசீலித்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவதற்கு பாலாஜியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, இதுகுறித்து நேற்று சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் பாலாஜி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், நல்லம்மாள் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். சின்னத்திரை துணை நடிகரிடம் இறப்பு சான்றிதழ்கள் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications