ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து! ஜனநாயகம் தோற்றுவிட்டது! அன்புமணி ஆதங்கம்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியதற்கு பதில் ஏலம் விட்டிருக்கலாம் என அன்புமணி கூறுகிறார்.
சேலம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து என்றும் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஈரோடு கிழக்கில் பாமக போட்டியிடவும் இல்லை, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;

இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து
''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து. இந்த கூத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து. இது ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தந்துள்ள இடைத்தேர்தல். அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முமாமிட்டிருந்ததால் கடந்த ஒரு மாத காலம் தமிழகம் ஸ்தம்பித்தது. ஆட்சி நிர்வாகம் தேக்கமடைந்தது.''

ஏலம் விட்டிருக்கலாம்
''தேர்வில் காப்பி அடித்தாலும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் போல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாது, ஆனால் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது மட்டும் உண்மை.''

தேர்தல் வாக்குறுதி
''தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இதனை தடுக்க முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
போதைப்பொ்ருட்கள் விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.'' தமிழ்நாட்டில் மது கடைகள் மூடப்படும் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்றார்.

போதை தெளிந்துவிட்டால்
''போதை தெளிந்துவிட்டால் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திராவிட கட்சிகளுக்கு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பு. இந்த விலை உயர்வை ஏற்க முடியாது என்பதோடு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications