மீண்டும் தொடங்கியது பெங்களூர் - காரைக்கால் ரயில் சேவை.. மலர் தூவி பயணிகள் உற்சாக வரவேற்பு!
சேலம்: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் - காரைக்கால் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், மலர் தூவி ரயிலை உற்சாகமாக வரவேற்றனர்.
Recommended Video
கொரோனா காலங்களில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்ட பொழுது, ஓசூர் பகுதி மக்கள் நெடு நாட்களாக பயன்படுத்தி வந்த ஓசூர் -பெங்களூர்- எஸ்வந்த்பூர் மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர்- காரைக்கால் ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையிலும் மற்ற ரயில்களும் முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில், 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் - காரைக்கால் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் தொடர்ந்து கோரிக்கை வைத்தார், இதையடுத்து, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமாரின் கோரிக்கையை ஏற்று இன்றுமுதல் மீண்டும் இயக்கப்பட்டது. மேலும், பெங்களூரு - காரைக்கால் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. குறிப்பாக, பயணியர் ரயிலாக இருந்த ரயில் சேவை, தற்பொழுது விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.35-க்கு காரைக்கால் வந்தடையும். காரைக்காலில் இருந்து வரும் 26ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், இரவு 9:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்
இந்நிலையில் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ரயிலுக்கு மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் RTI தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய் லட்சுமணன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications