25 வயசு! கல்யாணம் பண்ணி வைக்கல.. பெற்றோர் மீது புகார் கொடுக்க வந்த 2 கே கிட்.. அதிர்ந்த சேலம் போலீஸ்
சேலம்: திருமணம் செய்து வைக்க மறுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலத்தில் 25 வயது இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
திருமண வயதை தாண்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது...இன்னும் கல்யாணம் நடக்கலேயே என 90 கிட்ஸ்கள் பலரும் புலம்பி தள்ளுவதை சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் அதிகமாகவே பார்க்க முடிகிறது. அதிலும் 2 கே கிட்ஸ்கள் பலருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் 90 கிட்ஸ்கள் பெண் கிடைக்காமல் அலைவதாகவும் கூடி அவ்வப்போது மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்க விடுவதை காண முடியும்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்...சேலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனக்கு கல்யாணம் செய்து வைக்க மறுப்பதாக தனது பெற்றோர் மீது புகார் அளித்து இருக்கும் சம்பவம் போலீசாரையே ஒரு நிமிடம் தலைசுற்ற வைத்து இருக்கிறது. யாரப்பா நீ.. எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு நினைக்கிறீங்களா? சேலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இங்கே பார்ப்போம்.
இதெல்லாம் ஒரு பிரச்சினையா: சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம் எப்போதும் போல நேற்று பரபரப்புடன் இயங்கி கொண்டு இருந்தது. அப்போது இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்தார். தயங்கிய படியே வந்த அவரை பார்த்த போலீசார், என்ன விஷயம் என்று கேட்டனர். அப்போது, தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த புகார் மனு ஒன்றை போலீசிடம் அந்த இளைஞர் நீட்டினார். அதை படித்த போலீசாருக்கு ஒரு நிமிடம் தலைசுற்றி போனது.
அதாவது 25 வயதே ஆன அந்த இளைஞர் தனக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். போலீசாரோ புகாரை பார்த்து விட்டு.. நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்சினையில்.. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என இளைஞருக்கு அறிவுறை கூறினார்.
பரபரப்பான போலீஸ் நிலையம்: மேலும், இளைஞரின் பெற்றோரை அழைத்த போலீசார், அவர்களிடம் விவரங்களை கேட்டனர். அப்போது தனது மகன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. பைக் வாங்கி தந்தால் மட்டுமே வேலைக்கு போவேன் என்றான். தற்போது பைக் வாங்கி கொடுத்துவிட்டோம். ஆனால், இப்போதும் வேலைக்கு செல்லவில்லை. பிறகு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்... என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை அழைத்து முதலில் ஒழுங்காக வேலைக்கு போங்க... அப்புறம் தானாகவே வரன் அமையும்.. பெற்றோர் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். தனக்கு திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது புகார் அளிக்க வந்த 2 கே கிட்ஸ் இளைஞரால் சேலம் போலீஸ் நிலையமே கொஞ்சம் பரபரப்பாக காட்சி அளித்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications