சேலம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணப்பெண் செய்த காரியம்.. பாவம் அந்த புது மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான இளம் பெண், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக விடுமுறையில் வந்தவர் திடீரென மாயமானார். மாப்பிள்ளை பிடிக்காததால் மணப்பெண் ஓடிவிட்டாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமம், கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் (23 வயது) பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தங்கியிருந்தபடி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் தேடி வந்தனர்.

salem marriage tiruvannamalai

இதன்படி பட்டதாரியான இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி நிச்சயம் செய்தார்கள். இதற்காக விடுமுறையில் வீட்டுக்கு வந்த அந்த இளம்பெண் கடந்த டிசம்பர் 24-ந் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர், உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.. இதையடுத்து சேலம் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டை விட்டு மணப்பெண் ஓடிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் இன்னொரு சம்பவம்:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தாரகள். இதன்படி சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் குடும்பத்துடன் வந்து திருமணத்துக்காக பெண் பார்த்து சென்றார். அவர்களிடம் பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ள பார்த்தாரகள். இதன்படி சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் குடும்பத்துடன் வந்து திருமணத்துக்காக பெண் பார்த்து சென்றார். அவர்களிடம் பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தார்கள். அதன்படி திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு இருவீட்டாரும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு வழங்கினார்கள் அதன்பின்னர் சீரும் சிறப்புமாக கடந்த டிசம்பர் 12-ந் தேதி சேத்துப்பட்டு அருகே படவேடு கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணமும் நடந்தது.
இந்த திருமணத்தில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பெண் கேட்டு வந்த சென்னை வண்டலூரை சேர்ந்த இளைஞர் கடந்த டிசம்பர் 16ம் தேதி அன்று திருமணமான அந்த புதுப்பெண் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் புதுப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். உடனே புதுப்பெண் தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிட்டு சென்னை வாலிபருடன் காரில் சென்று விட்டார். இதுகுறித்து பெண்ணின் தாயார் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 4 நாளில் தாலியை கழற்றிவீசிவிட்டு சென்னை வாலிபருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் திருவண்ணாமலை சேத்துபட்டு பகுதியில் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் சேலத்தில் திருமணத்திற்கு முன்னரே பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+