சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்!
சேலம்: சேலத்தில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற 7 பேரும் உயிர் பிழைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டட தொழிலாளி.
இவர் நண்பர்கள் 6 பேருடன் சேலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்காக நடுப்பட்டியில் இருந்து தன்னுடைய ஆம்னி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சேலம் விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருடைய ஆம்னி காரின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாலையின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு உடனடியாக 7 பேரும் காரைவிட்டு வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து அவர் ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இந்த தீ விபத்தில் காரில் வந்த 7 பேரும் காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications