நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்!
சேலம் அருகே இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிகிறார்
Recommended Video
சேலம்: நடுராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. யார், என்னன்னே தெரியலயாம். பயந்து போன பொதுமக்கள் போலீஸ்கிட்ட புகார் அளித்துள்ளனர்.
சேலம், அம்மாப்பேட்டையில் கொஞ்ச நாளாகவே யாரோ நடுராத்திரி கதவை தட்டுகிறார்களாம். மெதுவா கூட இல்லை.. வேக வேகமாக தட்டவும், தூங்கி கொண்டிருப்பவர்கள் பதறியடித்து ஓடிவந்து பார்த்தால், யாருமே இருப்பதில்லையாம்.
முதலில் இதை பேய், பிசாசோ என்று நினைத்து பயந்துள்ளனர். அதன்பிறகு எல்லாருமே வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று சொல்லவும்தான் வேண்டுமென்றே இது செய்யப்படுவதாக நினைத்தார்கள். இதனால் பொதுமக்கள் போலீசாரிடம் சென்று புகார் சொல்லி உள்ளனர். இதையடுத்து போலீசாரும், அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு மர்ம நபர், நள்ளிரவுகளில் ஒவ்வொரு தெருவிலும் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கிறார். பிறகு வீடு வீடாக செனறு கதவை தட்டி விட்டு ஓடி விடுகிறார். அது மாடி வீடாக இருந்தாலும் சரி, படியேறி சென்று மாடி வீட்டை கதவை தட்டுகிறார்.
பிறகு அங்கிருந்து ஜம்ப் ஆகி பக்கத்து மாடிக்கு குதிக்கிறார். ஒருவேளை வீட்டின் கதவு திறந்திருந்தால், அங்கு போவதே இல்லை. இந்த நபர் சட்டையை கழட்டி கையில் வைத்து கொண்டுள்ளார். ஒரு சுருட்டை பற்ற வைத்து கொண்டு ஊதிக்கொண்டே தெருவெல்லாம், ஓடுவதும், நிற்பதும், குதிப்பதுமாகவே இருக்கிறது.
இந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், வீடு புகுந்து திருட முயற்சிக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications