மயங்கி விழுந்த பாட்டிக்கு உதவிய இளையராணி... நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்
இளைய ராணியின் மனித நேயத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேலம் விமான நிலையத்திற்கு வர வழைத்து பாராட்டியுள்ளார்.
சேலம்: மயங்கி விழுந்த மூதாட்டிக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து பாராட்டி பரிசளித்துள்ளார் மு.க ஸ்டாலின்.
Recommended Video
சேலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சாலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

கொரோனா அச்சத்தில் யாரும் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளிக்க முன்வரவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற இளம்பெண் இளையராணி மூதாட்டியை இருசக்கர வாகனத்தின் நடுவில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போதும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். யாருமே உதவ முன்வராத நேரத்தில் இளையராணி அந்த மூதாட்டிக்கு உதவிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இளைய ராணியின் மனித நேயத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேலம் விமான நிலையத்திற்கு வர வழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது என்று தனது பதிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications