சேலத்தில் சிஎம் விஜய்..ஸ்கூல் டைமில் ரோட்டோரம் நின்ற மாணவர்கள்! கையில் தட்டுடன் நின்ற பரிதாபம்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பதற்காக சேலம் சென்றார். வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பள்ளி நேரத்தில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் சாலையோரம் நிற்க வைக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். சம்பா சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள இந்த அணை நீர் தான் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் தொடங்கி நாகை மயிலாடுதுறை, இடையில் கரூர், நாமக்கல், சேலம், திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட ஏராளமான டெல்டா மாவட்டங்கள் இந்த நீரால் பயன்பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கடும் வறட்சி நிலவிவரும் நிலையில் கர்நாடகாவில் இருந்து நீர் வரத்தும் குறைந்ததால் மேட்டூர் அணை வறண்டது. தொடர்ந்து கர்நாடகாவும் நீர் திறக்க மறுத்ததால் குருவை சாகுபடி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அணை நீரை திறந்து வைப்பார் எனவும், இன்று முதல் 45 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என அறிவித்தது.
இதை அடுத்து சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் சென்ற முதல்வர் விஜயை அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரவேற்றனார். தொடர்ந்து அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் மேட்டூர் அணை திறப்பு விழாவுக்கு சென்ற முதல்வர் விஜயை சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் காவிரி நீரை திறந்து வைத்து விட்டு பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பள்ளி திறந்து இருக்கும் நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களையும் சாலையோரம் அதுவும் கடும் வெயிலில் நிற்க வைத்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரே வந்தாலும் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்தார்களா? அல்லது பள்ளி நிர்வாகத்தினர் விஜயை பார்க்க பள்ளிக்கு தற்காலிக விடுமுறை விட்டார்களா என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக விஜய் அரசு மீது குற்றம் சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவிகளை பள்ளி நேரத்தில் சாலையோரம் நிற்க வைத்தது சர்ச்சையாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
