சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர்னு கைவிலங்கை உடைத்த கைதி வெங்கடேஷ்.. கொரோனா தொற்றுடன் தப்பி ஓட்டம்.. பீதியில் சேலம்.. பரபரப்பு

சேலத்தில் தொற்று பாதித்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

Google Oneindia Tamil News

சேலம்: கொரோனா தொற்று பாதித்த ஒரு கைதி, தப்பித்து ஓடிவிட்டாராம்.. அவரால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சேலம் போலீசார் பதற்றமாகி உள்ளனர்.. பொதுமக்களும் அச்சமாகி உள்ளனர்.. எனவே, தனிப்படை அமைத்து அந்த கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த கைதியின் பெயர் வெங்கடேஷ்.. கடந்த 2019-ம் ஆண்டு கிரிமினல் குற்றத்துக்காக போலீசாரிடம் சிக்கினார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலிலும் அடைத்திருந்தனர்..

3 நாளாக முதலிடம்.. உள்மாவட்டங்களில் மோசமாகும் நிலை.. தமிழகத்திற்கு உடனடி தேவை ஸ்டிரிக்ட் லாக்டவுன்! 3 நாளாக முதலிடம்.. உள்மாவட்டங்களில் மோசமாகும் நிலை.. தமிழகத்திற்கு உடனடி தேவை ஸ்டிரிக்ட் லாக்டவுன்!

2 வருஷமாக ஜாமீன் கேட்டும், வெங்கடேசுக்கு கோர்ட் அனுமதி வழங்கவில்லை.. அதனால், சேலம் ஜெயிலிலேயே இருந்து வந்தார்.

 சிகிச்சை மையம்

சிகிச்சை மையம்

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, வெங்கடேசுக்கு திடீரென ஜூரம் வந்தது.. அதனால், உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்..கொரோனா டெஸ்ட் எடுத்ததில் தொற்று உறுதியானது.. அதனால், அவரை சேலம் அன்னதானப்பட்டி மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நேற்று முன்தினம் விடிகாலை 5 மணி இருக்கும்.. அப்போதுதான், அந்த மையத்தினுள் நுழைந்தனர்.. வெங்கடேசின் பாதுகாப்புக்காக 3 வார்டன்களும் நிறுத்தப்பட்டனர்.. ஆனால், அன்றைய தினம் இரவு 8.30 மணியில் இருந்து வெங்கடேசை காணவில்லை.. அதிர்ச்சியடைந்த வார்டன்கள் எங்கெங்கோ தேடினர்.. ஆனாலும் வெங்கடேஷ் கிடைக்கவில்லை..

சஸ்பெண்டு

சஸ்பெண்டு

உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. அவர்களும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. இரவு 8.30 மணிக்கு வார்டன்கள் சாப்பிட சென்றுள்ளனர்.. அப்போதுதான் கைவிலங்கை உடைத்து கொண்டு வெங்கடேஷ் தப்பித்து சென்றது தெரியவந்தது..இதையடுத்து, ரவிக்குமார், புஷ்பராஜ், சதீஷ் ஆகிய 3 வார்டன்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பதட்டம்

பதட்டம்

இப்போது வெங்கடேஷ் எங்கு தப்பித்து சென்றிருப்பார் என்று தெரியவில்லை.. அவர் எங்கு தப்பித்து சென்றாலும், நோயை பரப்பும் அபாயம் உள்ளது.. ஆனால், சேலத்திலேயே பதுங்கி இருக்கலாம் என்றுதான் போலீசார் கருதுகிறார்கள்.. எனவே, அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து சேலம் முழுக்க வலைவீசி தேடி வருகிறார்கள்.. இந்த தகவல் அறிந்து பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.. போலீசாரிடம் பிடிபடும் வரை, வெங்கடேஷ் அதுவரை யாருக்கும் தொற்றை பரப்பாமல் இருக்க வேண்டும்..!

English summary
Coronavirus affected Salem prison escaped from Covid center
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X