தூய்மை பணியாளர்கள் கைது.. “கூட்டணி என்பதால் அனைத்தையும் ஆதரிக்க முடியாது” - பெ.சண்முகம்
சேலம்: தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் கடும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்த நிலையில், அவர் முன்னிலையில், "கூட்டணி என்பதால் அனைத்தையும் ஆதரிக்க மாட்டோம்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கறாராக பேசியிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மாநாட்டில் பெ.சண்முகம் பேசியதாவது, "வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவது, சாம்சங் தொழிலாளர் பிரச்சனை, தூய்மை பணியாளர்கள் போராட்டம் என எந்த ஒரு வர்க்க பிரச்சனையாக இருந்தாலும் சரி, தொழிலாளர் வர்க்கத்தின் நலனை பாதிக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயல்படுமானால் அதை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள். அதுதான் எங்களுடைய வர்க்க கடமை. எங்களின் வர்க்க நலனை விட்டுக் கொடுத்துவிட்டு அரசியல் உறவு என்பது எப்படி சாத்தியமாகும்?
கூட்டணி என்பது மத்திய பாஜக அரசுக்கு எதிராகத்தான். பாஜகவை எதிர்க்க களத்தில் நிற்போம், கழகத்துடன் நிற்போம். ஆனால் அதே நேரத்தில் தொழிலாளி வர்கத்தின் நலன், உழைப்பாளி மக்களின் நலன் பாதிக்கப்படும் எனில், அதை தவறு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தைரியமாக சொல்லும். முரண்படுவதும், உடன்படுவதும் சேர்ந்ததுதான் இந்த கூட்டணியே தவிர, அனைத்தையும் ஆதரிப்பதும் அனைத்திற்கும் உடன்பட்டு போவது இந்த கூட்டணியின் நிலைப்பாடு அல்ல" என்று பேசியிருக்கிறார்.
பெ.சண்முகம் பேச்சின் பின்னணி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட 15 மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியை, ஏற்கெனவே சில மண்டலங்களில் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மண்டலங்களிலும் இதே நடைமுறை மேற்கொள்ள முயன்றபோது, தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். 13 நாட்களாக ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்துவிட்டது. மட்டுமல்லாது போராட்டங்களை கைவிடவும் வலியுறுத்தியது. இதற்கிடையில் தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், தூய்மை பணியாளர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகவும் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவ்வாறே உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு போலீசார் தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.
இதில் போலீசார் தூய்மை பணியாளர்களை அணுகிய விதம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது தூய்மை பணியாளர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசின் நடவடிக்கைக்கும், போலீசாரை கண்டித்தும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இப்படி இருக்கையில், பெ.சண்முகம் பேசியது கவனம் பெற்றிருக்கிறது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications