தெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்!
பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டு இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்
Recommended Video
சேலம்: தெருவில் வெடித்த ஒரு பட்டாசு இளைஞர் மீது தெறித்து விழுந்தது.. இந்த விவகாரம் கடைசியில் ஒரு உயிரை பலி வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது.
சேலம் அம்மாபேட்டை நதிமுல்லா மக்கான் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். 23 வயதாகிறது. டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, இவரது நண்பர் முகமது சபீர். இவர், 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் சைக்கிளில் அம்மாபேட்டை வித்யா நகர் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த தெருவில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பட்டாசு முகமது சபீரின் சட்டை மீது தெறித்து விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டார். இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கும், முகமது சபீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து முகமது சபீர், அபுக்கருக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார். உடனே அபுபக்கர் 10 பேரை கூட்டிக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். அதேபோல் எதிர் தரப்பினரும் 10-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து விட்டனர். இரு தரப்பும் பலமாக தெருவிலேயே மோதிக் கொண்டனர்.
கையில் கிடைத்த கற்கள், கட்டைகள், இரும்பு கம்பிகளால் ஒருத்தரையொருத்தர் அடித்து கொண்டனர். அந்த தெருவே ரணகளமாகிவிட்டது. அதனால் மக்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள். இந்த தாக்குதலில் அபுபக்கரும், முகமது சபீரும் பலத்த காயமடைந்தனர். இதில் அபுபக்கர் அங்கேயே உயிரிழந்தார்.

முகமது சபீர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி, இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் 3 பேரை பிடித்துவிசாரித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications